பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 இடையில் பூதக்கண்ணாடியை வைத்தால் பஞ்சு எரிந்து போகிறது. ஆகவே புதிதாக வந்தது சூரியனும் அன்று பஞ்சும் அன்று. சூரியனுக்குப் புதிதாக எரிக்கும் சக்தி வரவில்லை. புதிதாக வந்தது பூதக்கண்ணாடி. அப்படி ஆன்மாவையும், பரமான்மாவையும் ஒன்றுபடுத்து வதற்கு வேண்டிய ஒன்று இடையில் வரவேண்டும். அதுதான் பக்குவம் என்பது. பக்குவம் இல்லாத காரணத்தினால் ஆன்மாவும், பரமான்மாவும் ஒன்றின் பக்கத்தில் ஒன்று இருந்தாலும் பரமான் மாவின் இன்பத் தாக்குதல் ஆன்மாவின் மேல் சாருவது இல்லை. சாருவதற்குரிய பக்குவம் வந்தால் இன்பம் வந்து வந்து தாக்கும். எல்லோரிடமும் அது தாக்காததனால் இறைவனிடம் இன்பம் இல்லையென்று சொல்ல இயலாது. இறைவனிடம் இருக்கும் அந்த மின்சாரத் தாக்குதலைப் பெறுவதற்கு ஏற்ற பக்குவம் ஆன்மாக்களுக்கு இல்லை என்பதே உண்மை. வேறு ஒர் உதாரணம் பார்க்கலாம். ஒரு மின்சாரக் கம்பி (Live Wire). கட்டைபோட்டுக் கொண்டிருக்கின்றவன் அதில் வேலை செய்கிறான். கட்டை இல்லாமல் அதைத் தொட்டால் மின்சாரத் தாக்குதல் அடிக்கிறது. எனக்கு ஷாக்கு அடிக்கிறது என்று இவன் சொன்னால் மற்றவனுக்கு அடிக்கவில்லையே என்று சுட்டிக் காட்டலாமா? அதற்குக் காரணம் உண்டு. மின்சாரம் ஏற முடியாத பக்குவத்தில் அவன் இருக்கிறான். மின்சாரம் ஏறும் பக்குவத்தில் இவன் இருக்கிறான். கட்டை அப்படி, எங்கும் நிறைந்திருக்கிற இன்பமயமான ஒன்று அருணகிரியாரை வந்து வந்து தாக்கிற்று. அப்படித் தாக்கியதற்குக் காரணம் அவரிடம் பக்குவம் உண்டானதுதான். நாமோ மின்சாரத் தாக்குதலைப் பெறாத கட்டையாக இருக்கிறோம். நம் உள்ளம் கட்டையாக, நம் உடம்பு கட்டையாக இருக்கின்றன. உள்ளமும் உடம்பும் ஆகிய கட்டையைக் கவசமாகப் பெற்றிருப்பதனால் உயிரினிடையே மின்சாரத் தாக்குதல் உண்டாவதில்லை. இந்தக் கட்டைத் தன்மை மாறிப் பக்குவம் உண்டானால் அந்தத் தாக்குதல் நமக்கும் உண்டாகும். 21Ο