பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 பற்றியும், அது எந்த நிலத்தில் விளைகிறது என்பதைப் பற்றியும், கரும்புச் சாற்றை ஆலையில் சர்க்கரையாக எவ்வாறு மாற்று கிறார்கள் என்பதைப் பற்றியும் மிகமிக விரிவாகப் பேசுவார். அது சம்பந்தமாக இநுநூறு புத்தகங்களுக்கு மேல் தாம் படித்த தாகச் சொல்வார். ஆனால் அவர் ஒரு பிடி சர்க்கரையை வாயில் போட்டுச் சுவைத்து அறியாதவர். சர்க்கரையைப் பற்றி அவரு டைய ஞானம் எத்தகையது? - வேறு ஒருவன் கரும்பு பற்றிய விஷயமோ, சர்க்கரை ஆலையைப் பற்றிய செய்தியோ ஒன்றையுமே விரிவாகத் தெரிந்து கொள்ளாதவன்; அதைப் பற்றிப் பேசத் தெரியாதவன். ஆனால் தினந்தோறும் சர்க்கரையைப் பிடிப்பிடியாகத் தின்கிறவன். அவன் சர்க்கரையைப் பற்றி விளம்பரம் செய்து கொண்டிருக்க மாட்டான். முடிந்தால் ஒரு பிடி சர்க்கரையைப் பிறருக்கு கொடுப்பான். அவன் உண்மையில் அநுபவிக்கிறவன். ஆகை யால் வாயளவில் அப்படி இப்படி என்று பேசுவதைக் குறைத்துக் கொள்கிறான். பேசாமல் இருக்கிறான். வாய் நிறையச் சர்க்க ரையைப் போட்டுக் கொண்டால் எப்படிப் பேசுவது? எங்கே உண்மையான அநுபவம் உண்டாகிறதோ அங்கே பேச்சுக்கு இடம் இல்லை. "கண்டவர் விண்டிலர்' என்கிற பழமொழியை நாம் கேட்டிருக்கிறோமே. பேசா அநுபூதி - - "அங்கே பொங்கிவரும் பாலுண்டு அங்கம் இளைப் பாறிக்கொண்டு தங்கப்பொம்மை போலே என்றும் நில்லுமே - துன்பம் -வெல்லுமே அதைக், கண்டாரும் விண்டதில்லை விண்டாரும் கண்டதில்லை அண்டாண்ட கோடியெல்லாம் ஒன்றாய்ப் பரந்திருக்கும் அல்லவோ - அடியேன் - சொல்லவோ' என்று நந்தனார் சரித்திரக் கீர்த்தனத்தில் அநுபவத்தையும், வாக்கையும் பற்றிய செய்திகள் வருகின்றன. இறைவனுடைய திருவருளால் அநுபவம் முதிர்ந்தவர்களுக்கு அதைப் பற்றிப் பேசுவதற்கு வாய் வராது. 12