பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லொணா ஆனந்தம் அதன் வசம் நாம் இப்போது மனத்தின் வசப்பட்டிருக்கிறோம். எப்போதும் ஏதாவது ஒன்றின் வசமாக நாம் இருக்க வேண்டும். மனத்திற்கு வசமாக இருக்கும் வரையில் இறைவன் அருளுக்கு வசமாக முடியாது. மனம் நமக்கு வசப்பட்டதானால் இன்பம் உண் டாகும். அப்படி ஆவதற்கு இறைவன் திருவருள் வந்து வந்து தாக்க வேண்டும். "உரையவிழ உணர்வவிழ உளமவிழ உடலவிழ உயிரவிழ உளபடியை உணருமவர் அநுபூதி யானதுவும்" என்று அருணகிரியார் திருவகுப்பில் பாடுகிறார். உள்ளம் உணர்வு ஆகியவை தம் செயல் இழந்து நிற்கிறபோது இறைவனது அநுபூதி கிடைக்கும். அத்தகைய அநுபூதியைச் சொல்ல ஆசைப் படுகிறார் அருணகிரியார், அறுமுகவா சொல்லொணாது இந்த ஆனந்தமே! என்று பேசுகின்றார். இதுவரைக்கும் சொன்னது அத்தனையும் சொன்னதாக ஆகாதா என்றால் இவை யாவும் அதனைப் பற்றிய செய்தியேயன்றி, அதனை நேரே சுட்டிக் காட்டியதன்று என்று முன்பே சொன்னேன். அது சொல்லொணாதது என்னும் போது, அறுமுகவா என்று விளிக்கிறார். அறுமுகவன் போக்கும், வரவும், இரவும், பகலும், புறம்பும், உள்ளும், வாக்கும், வடிவும், முடிவும் இல்லாத பொருளை அநுபவிக்கும் போது பேசமுடியாது. இப்போது பேசுகின்ற அருணகிரியார் ஆனந்த அநுபவத்தை நினைவிலே கொண்டு பேசுகின்றார். அந்த நினைப்பு வரும்போதே எந்த வாயிலாகப் புகுந்தோம் என்ற எண்ணமும் உடன் தோன்றுகிறது. ஒரு வீட்டுக்குள் புகுந்து அதனிடையே நின்று இன்பம் பெற்ற ஒருவன் மீட்டும் வெளியில் வந்து பிறருக்கு அதைப் பற்றிச் சொல்லும்போது, 'அதுதான் வாசல்' என்று அடையாளம் காட்டுவான். 'அதன் உள்ளே பெரியகூடம் இருக்கிறது. அந்தக் கூடத்தில் மெத்தை இருக்கிறது. அதில் என்னை மறந்து தூங்கினேன்' என்பான் . 2篮3