பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 அருணகிரியார் அநுபூதி நிலையில் இருந்து வெளியில் வந்து நின்று நமக்குச் சொல்கிற சமயம் இது; ஆகையால்தான் அவரால் பேச முடிகிறது. முருகப் பெருமானை அறுமுகவனாகக் கண்டு, அந்த உருவ வழிபாடாகிய வாயில் வழியே சென்று போக்கு வரவு எல்லாம் இழந்து கிடந்த இன்ப அநுபூதியைப் பெற்றவர். இப்போது புறத்திலே இருந்து காட்டுகிறார். ஆகவே தாம் புகுந்த திருவாயிலைச் சுட்டிக் காட்டுவதுபோல அறுமுகவன் என்று மூர்த்தியைச் சொல்கிறார். அந்தப் பெருமானையே விளித்துப் பாடுவது போலப் பாடுகிறார். அறுமுகவா சொல்லொணாது இந்த ஆனந்தமே. சிவபெருமானுடைய ஐந்து முகமும் உமாதேவியாரின் ஒரு முகமும் சேர்ந்து, சிவனும் சக்தியும் கலந்த ஒரு திருவுருவமாக ஆறுமுகநாதனாகிய ஆண்டவன் தோன்றினான் என்பது ஒன்று. இறைவன் தன்னுடைய ஐந்து முகங்களையும், அதோ முகத்தை யும் சேர்த்து ஆறுமுகக் கடவுளாகத் திருஅவதாரம் செய்தான் என்பது மற்றொன்று. நான்கு திசைகளாகிய இடங்கள், மேல் கீழ் என்ற இரண்டு ஆகிய ஆறு இடங்களிலும் எம்பெருமானின் கருணைப் பார்வை செல்கின்றது என்பதை அவன் ஆறுமுகம் கொண்டதனால் உணரப் பெறலாம். மனிதனுடைய உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் அவன் தனித்தனியே நின்று பாது காத்து வருகிறான். யோகிகள் அந்த ஆதாரங்களில் அவனுடைய திருமுக மண்டலத்தைத் தரிசிக்கலாம். ஆகையால் ஆறுமுக நாதனாக இருக்கிறான். இவ்வாறெல்லாம் ஆறுமுக தத்துவத்தைக் கூறுவது உண்டு. அதுவே ஆதியானது; அந்தமானது. ஒருவகை யில் சொன்னால் ஆதியும், அந்தமும் அற்றது. “தனது தொல்லைத் திருமுகம் ஆறும் கொண்டான்' என்பது கந்தபுராணம். ஆறுமுகம் மிகப் பழமையானது. "ஆதியொடும் அந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று தெளியேனே" என்று திருப்புகழில் அருணகிரிநாதப் பெருமான் அருளியிருக் கிறார். ஆகையால் முருகனுடைய ஆறுமுக தத்துவம் மிகப் பழமையானது; மிகப் புதுமையானது; எல்லாக் காலத்திற்கும் உரியது. அத்தகைய ஆறுமுகத்தை எண்ணி, தியானித்து, அந்தத் 214