பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லொணா ஆனந்தம் திருவாயில் வழியிலே புகுந்து ஆண்டவனுடைய அருள் இன்பத் தாக்குதலுக்கு உட்பட்டபோது, எல்லாம் கடந்த பேரானந்தப் பெருவாழ்வு அருணகிரியாருக்குக் கிடைத்தது. அப்போதும் அவர் திருவாசலை மறக்காமல் சுட்டிக் காட்டுகிறார். இத்தகைய இன்பத்தை அநுபவிப்பவர்கள் சிலரானாலும், அதைப் பற்றிச் சொல்பவர்கள் சிலரிலும் சிலர். இவர்களில் மிகச் சிறந்தவர் அருணகிரியார் என்பதை நாம் மறக்கக் கூடாது. போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும் வாக்கும் வடிவும் முடிவும்இல் லாதுஒனறு வநதுவநது தாக்கும்; மனோலயம் தானே தரும்;எனைத் தன்வசத்தே ஆக்கும்; அறுமுக வா, சொல் லொணாது.இந்த ஆனந்தமே! (போவதும் வருவதும் இரவும் பகலும் வெளியும் உள்ளும் சொல்லுக்குள் அகப்படும் தன்மையும் கண்ணினால் காணும் வடிவமும் முடிவும் இல்லாமல் ஒர் அநுபவப் பொருள் அடிக்கடி வந்து வந்து என்னைத் தாக்கும்; என் மனம் லயிக்கும்படியான அமைதியைத் தரும்; என்னைத் தன்மயமாக ஆக்கிவிடும்; ஆறுமுகப்பெருமானே! இந்த ஆனந்த அநுபவம் இன்னபடி இருந்ததென்று சொல்ல முடியாது. போக்கு வரவு என்னும் இரண்டும் ஒன்றற்கொன்று தொடர்பு டையவை. அப்படியே இரவு பகல், புறம்பு உள், வாக்கு வடிவு என்பன இரட்டைகள், வாக்கு ஒலியினால் உணர்வது; வடிவு ஒளியினால் உணர்வது. காதும் கண்ணும் ஆகிய இரண்டு பொறிகளுக்குப் பொருளாக உள்ளவை இவை. இல்லாது - இல்லாமல்; இல்லாதது ஒன்று என்பது செய்யுள் விகாரத்தால் தொக்கது என்றும் கொள்ளலாம். இன்ன பொருள் என்று சுட்டலாகாமையின் ஒன்று என்றார். இறைவன், அவன் அருள், அவன் அருளால் விளையும் அநுபவம் என்று எதையேனும் கொள்ளலாம்; உண்மையில் அந்த மூன்றும் ஒன்றுதான். தானே தரும் என்றது, என் முயற்சியின்றியே வந்ததென்றபடி, தன் என்றது ஒன்று என்று சுட்டியதை. இந்த ஆனந்தம் என்று அண்மைச் சுட்டினால் சொன்னார். அது தமக்குக் கை வந்த உணர்ச்சியினால், அறுமுகவா, ஒன்று தாக்கும், தரும்; ஆனந்தம் சொல்லொணாது என்று கூட்டுக.) இது கந்தர் அலங்காரத்தில் 73-ஆம் பாட்டு. க.சொ.V-15 2士5