பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் தெரிந்து கொண்டதை மீட்டும் நினைப்பதும் ஆகிய இயல்பு களைக் கொண்டிருக்கிறது. இன்னும் சில பொருள்கள் இருக் கின்றன. அவற்றைத் தெரிந்து கொள்ள எவ்வளவு முயன்றாலும் முடிவது இல்லை. ஒரு புத்தகத்தைப் படித்தால் சில பேருக்கு எளிதில் தெளிவு வந்துவிடுகிறது. சில பேருக்கு எத்தனை படித்தாலும் வருவது இல்லை. அறிவு அந்த அந்தப் பிறவியோடு போய்விடுவதன்று. உடம்பு பிறவிதோறும் மாறுகிறது. அறிவோ பல பிறவிகளிலும் தொடர்ந்து வரும். அதனால் சிலருக்கு முன்னைக் கூர்மை இருக்கும். "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்பர் வள்ளுவர். ஒரு பிறவியில் ஒருவன் கற்கும் கல்வி ஏழு பிறவிகளிலும் அவனுக்குத் தொடர்ந்து வரும் என்பது அதன் கருத்து. ஆகையால் பிறவிதோறும் தொடர்ந்து வருவது கல்வியின் சாரம். எடுத்தவுடன் ஒரு புத்தகத்தை ஒருவன் அறிந்துகொண்டு விடுகிறானே என்றால், முன்னாலேயே தொடர்பு இருக்கிறது. ஒருவன் செதுக்குவதற்கு வாச்சியைத் தீட்டி வைத்துக் கொண்டிருக் கிறான். ஒய்வதற்கு இன்னொருவன் அம்பைத் தீட்டி வைத்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் வேலையில் புகுந்தால் உடனே விரைவாக வேலை முடிந்துவிடும். அப்படி இல்லாமல் புதிதாக வாச்சியைத் தீட்டிக் கொண்டு வேலை செய்ய வேண்டுமானால் தாமதம் ஆகும். அதுபோல ஒருவன் கணக்கில் புலியாக இருக் கிறான். முன் பிறப்பில் அதற்கு வேண்டிய சமஸ்காரங்கள் இருக் கும். ஒருவன் சித்திரம் தீட்டுவதில் நிபுணனாக இருக்கிறான். அதற்கு வேண்டிய அறிவை முன் பிறவியில் தீட்டிக் கொண்டிருக் கிறான். கவிதை புனைவதற்கு வேண்டிய அறிவைத் தீட்டி வைத்துக் கொண்டிருக்கிறவன் இந்தப் பிறவியில் ஆயிரம் பதினாயிரம் கவிதைகளை இயற்றக் கூடியவனாக இருக்கிறான். இப்படி முன் பிறவியில் அவரவர்கள் அந்த அந்தத் துறைக்கு வேண்டிய அறிவைத் தீட்டி வைத்துக் கொண்டிருப்பதனால் தான் இந்தப் பிறவியில் அவர்கள் அந்த அந்தத் துறைகளில் சிறப்புடையவர் களாக வாழ்கிறார்கள். எனக்கு அப்படி வரவில்லை என்றால், முன்பு கூர்மையாக்கிக் கொள்ளவில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும். . 223.