பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்க்குமிழி "பேசா அநுபூதி பிறந்ததுவே" என்று தம்முடைய அநுபவத்தை இறைவனுடைய அருளிலேயே மறைத்துப் புதைத்துக் கொள்வார்கள் பெருமக்கள். உலகத்தில் எந்த அநுபவமானாலும் அநுபவ முதிர்ச்சியில் பேச்சு எழாது. பெரும் புத்தகத்தைப் படித்து அறிந்து கொண் டாலும், அதனுடே அநுபவிக்கின்ற ஒரு நிலையில் எல்லாம் மறந்து, தூங்காத தூக்கம் சித்திக்கும். "சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளை வாங்காதானை' என்று அப்பர் சுவாமிகள் சொல்வர். அப்படி ஒன்றிலே ஈடுபட்ட வனுக்கு வேறு எதிலும் நாட்டம் இராது. எந்தப் பேச்சும் காதில் விழாது. அதற்குள்ளே புதைந்து போவான். சிறிதுகூட அநுபவம் இல்லாதவர்களே புத்தகத்தைப் படித்துப் படித்துப் பலபடியாக விரித்துப் பேசுவார்கள். அஷ்டாங்க யோகத்தைப் பற்றியும், சந்திர மண்டலத்தை முட்டி அமுத நுகர்ச்சி பெறுவதைப் பற்றி யும், ஆதார யோகத்தைப் பற்றியும் மணிக்கணக்காக அளப்பார் கள். அத்தனை பேச்சும் உணர்ச்சி இல்லாத பேச்சு; அந்தப் பேச்சைப் பிழிந்தால் ஒரு சொட்டுக்கூட அநுபவம் இராது. பிறர் துன்பத்துக்கு இரங்கல் இப்படிப் பேசுகின்றவர்கள் மனிதனுக்கு மனிதன் காட்டு கின்ற இரக்கங்கூட இல்லாதவர்களாக இருப்பார்கள். "யாக்கையே நிலை இல்லாதபோது அதற்கு வரும் துன்பம் மாத்திரம் நிலைத்தது ஆகுமா?' என்று நினைக்கிறார்களோ என்னவோ தெரியாது. ஆனால் பிறருக்குப் பசி வரும்போதுதான் இந்த வேதாந்தத்தைச் சொல்ல முடியும். அவர்களுக்குப் பசி வந்து விட்டால் வீடே திமிலோகப்பட்டுவிடும். பசியினால் வரும் துன்பத்தைத் தம் அநுபவத்தில் உணர்ந்திருக்கிறபோது அதே துன்பம் மற்றவனுக்கும் உண்டு என்பதை உணர முடியாதா? இத்தனை பேசத் தெரிந்து கொண்ட அவர்களுக்கு அதை உணரவும் தெரியும். ஆனால் அவர்கள் உணர மறுக்கிறார்கள். உணர்ந்தாலும் செயலிலே காட்டுவது இல்லை. 13