பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 மயக்கமும் தெளிவும் முன்பு கண்டு உறவாடிய ஒருவனைத் தெரிந்து கொள்ள முடியாமைக்குக் காரணம் மனத்தில் தெளிவு இல்லாத தன்மை, மனத்திற்கு மறதி இயற்கையாக இருப்பதனால் கண்டதே மறந்து போகிறது. அப்படியே பிறவி மயக்கத்தினால் போன பிறவியில் நாம் எப்படி இருந்தோம் என்பது தெரிவதில்லை. நமக்குத் துணையாக இருக்கிற கடவுளை நாம் மறந்துவிடுகிறோம். இவை எல்லாம் மனம் கலங்கி நிற்பதனால் உண்டாகின்றவை. இருள், அஞ்ஞானம், அவித்தை என்று பல பல பெயர்களால் சொல்லப் படும் அறியாமையினால் உண்மைப் பொருள் இன்னது என்று தெரிந்து கொள்ள வகையில்லாமல் வாழ்கிறோம். கலக்கம் நீங்கி, இருள் நீங்கிக் கொஞ்சம் தெளிவு உண்டானால் ஞான ஒளி நமக்குக் கிடைக்கும். மயக்கம் இருக்கும்போது தெளிவு இல்லை; ஒளி இல்லை. தெளிவு இருக்கும்போது மயக்கம் இல்லை. ஒளியும் கிழலும் ஒளி இருக்கும்போதே நிழல் இருக்கிறதும் உண்டு. அது வேறு வகை. ஒளியைத் தருகிற பொருள் வேறு நிழலைத் தருகிற பொருள் வேறு. ஒளி நிழல் இரண்டும் கலந்து இருப்ப துண்டு. ஒளியைத் தருகின்ற பொருளுக்கு முன்னால் நிழலைத் தருகின்ற பொருள் இருந்தால்தான் நிழல் விழும். விளக்குக்கு முன்னால் மரம் இருந்தால் விளக்கின் ஒளியிலே மரத்தின் நிழல் தெரியும். இந்த நிழலும் மரத்தின் எதிர்ப்புறத்தில் விழும். சூரியன் கிழக்கே உதித்தால் அதன் எதிரிலேயுள்ள கட்டிடத்தின் நிழல் மேற்கே விழும். சூரியன் மாலையில் மேற்கே வரும்போது கட்டிடத்தின் நிழல் கிழக்கே வரும். இதிலிருந்து ஒளிக்கும் நிழலுக்கும் நேர் விரோதம் என்று தெரிகிறது அல்லவா? நிழல் இல்லாமல் போகவேண்டும் என்றால் சூரியனுக்கு முன் நிற்கும் கட்டிடம் இல்லாமல் போக வேண்டும்; அல்லது கட்டிடமும் ஒளியுடையதாக நிற்க வேண்டும். அப்போது நிழல் படியாது. ஒளி முன் ஒளியாக நின்றுவிட்டால் நிழல் இல்லாமல் போய் விடும். சூரியனுக்கு முன்னால் நிற்கிறவன் கீழே படுத்துக் கொண்டால் அவன் நிழல் எங்கும் படிவது இல்லை. அப்போது அவன் செயல் இழந்தவனாக இருக்கிறான். 222