பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 ஆனாலும் அந்தத் தெளிவு உண்மைத் தெளிவாகாது. அதுவும் கனவுப் பகுதியே. அது போலித் தெளிவு. அதுபோல் மலத் தினின்றும் நீங்காமல் அஞ்ஞான நிலையில் நாம் தெளிவு பெற்றதாகத் தோன்றுகிறது. அது போலித் தெளிவு. இப்போது விழிப்பது போல நமக்குத் தோன்றுகிறது. இந்த விழிப்பு உண்மையான விழிப்பு அல்ல. நாம் காணுகின்ற காட்சி அத்தனையும் உண்மையான காட்சியும் அன்று. எப்படிக் கனவில், கனவு தெளிந்ததாகக் காணும்போது அது உண்மையான தெளிவு ஆகாதோ அதுபோல், இப்போது நாம் காணுகின்றது சரியான காட்சி என்று தெளிவாகத் தோன்றினாலும் இது முடிந்த முடிவான தெளிவு அன்று. உண்மையான ஒளியில் அல்லது உண்மையான விழிப்பில் நாம் நிற்கும் நிலைதான் உண்மையான தெளிவை உண்டாக்கும். உண்மையான விழிப்பா வது யாது? ஐந்து பொறியும் அடங்க, மனம் சலனம் இல்லாமல் நிற்க, நாம் இறைவனுடைய அருள் ஒளியில் நிற்கும் நிலைதான் அது. நிழல் இல்லாது ஒளி இல்லாது வேறு பொருள் இல்லாத நிலை அது. அந்த நிலையில் நின்றால் இன்பத்தை நுகர முடியும். “இத்தேகமொடு காண்பனோ?” என்று தாயுமானவர் கூறுவர். இத்தேகத்தோடு அத்தகைய இன் பத்தைக் காண முடியும் என்ற கருத்தை அது புலப்படுத்துகிறது. அந்த நிலையை இந்த உடம்போடு இருக்கும்போதே அடைந்துவிடலாம் என்பது அநுபவித்தாலன்றித் தெரியாது. அதற்குப் போகிற வழியை மாத்திரம் சுட்டிக் காட்டலாம். அதையே இந்தப் பாடலில் சொல்கிறார் அருணகிரியார். படியேறுதல் நாம் இப்போது இருக்கும் இடம் தாழ்ந்த இடம். மிக உயர்ந்த இடத்திற்குப் போகவேண்டும். இடம் என்று சொன் னாலும், கண்ணால் காணுகின்ற இடம் என்பது பொருள் அன்று. அது ஒரு நிலை. உயிர் இன்பத்தில் நிற்கின்ற நிலை எதுவோ அதுதான் முக்தி என்று சொல்வார்கள். இப்போது நம் உயிர் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற இடம் தாழ்வான நிலை. இதை விட மிகச் சிறந்த இன்பநிலை ஒன்று உண்டு. அது மேலான 224