பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் நிலை. தாழ்ந்த நிலையில் இருக்கிறவன் மேலான நிலைக்குப் போகவேண்டுமானால் மெல்ல மெல்லப் படியேறிச் செல்ல வேண்டும். இந்தப் படிகளுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று சொல்வார்கள். அவற்றைச் சோபானம் என்பர் வடமொழியாளர். சரியை என்பது ஆண்டவ னுடைய திருநாமத்தைச் சொல்வது, அடியார்களோடு சேர்ந்து அவன் தொண்டுகளைப் புரிவது முதலியன. கிரியை என்பது இறைவனுக்குப் பூசை முதலியன செய்தல், யோகம் என்பது உள்ளத்தை இறைவனுக்குப் பீடமாக அமைத்து மனத்தில் பூசை முதலிய செய்தல். ஞானம் என்பது அறிவுச் சிறப்பினாலே உலக நிலை, உயிர்நிலை என்பனவற்றை ஆராய்ந்து இந்திரிய நிக்கிரகம் செய்தல். இந்த நான்கும் ஒன்றுக்கு மேல் ஒன்று உள்ளவை. சரியை நிலையைத் தாண்டிக் கிரியை நிலைக்கு வந்து கிரியை நிலையைத் தாண்டி யோக நிலைக்கு வந்து, யோக நிலையைத் தாண்டி ஞான நிலையை அடையவேண்டும். இவை நான்கும் சாதனம். ஞானத்திற்கு அப்பால் இறைவனுடைய அருள் இன்ப மாகிய சாத்திய நிலை இருக்கிறது. அதுதான் முத்தி. சரியை முதலிய நான்கு சோபானங்களையும் சாத்திரங்கள் சொல்கின்றன. அருணகிரியார் அவற்றையே வேறு வகையில் அலங்காரமாகச் சொல்கிறார். அருள் வேண்டும் அராப்புனை வேணியன் சேய் அருள் வேண்டும். முதலில் முருகப் பெருமானுடைய திருவருள் வேண்டும் என்கிறார். அந்த அருள் கிடைத்தால் நமக்கு அன்பு உண்டாகும். முருகப்பெருமானைத் தொழும் இயல்பு வரும். 'ஆண்டவ னுடைய திருவருளை அடைவதற்குத்தானே நாம் முயல்கிறோம்? அவன்பால் அன்புகொண்டு தொழுவதற்கு முன்னால் அந்த அருள் எப்படிக் கிடைக்கும்?' என்ற சந்தேகம் நமக்குத் தோன் றும். நம்மால் எந்தக் காரியத்தையும் தொடங்கி நிலை நிறுத்து வது முடியாது. இறைவன் திருவருள் இயக்கத்தினால்தான் நாம் இயங்கவேண்டும். இறைவன்பால் அன்பு உண்டாவதற்குக்கூட அவன் அருள் வேண்டும். நமக்கு அவன்பால் அன்பை உண் 225