பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 டாக்குகின்ற அருள் ஒன்று; முடிந்த முடிபாகிய இன்பத்தைத் தருகின்ற அருள் வேறு. "அவனரு ளாலே அவன்தாள் வணங்கி" என்று மணிவாசகர் பேசுகிறார். “பாட்டுவித்தால் யாரொருவர் பாடாதாரே' என்று அப்பர் சுவாமிகள் சொல்கிறார். நாம் ஒரு வீட்டுக்குப் போகிறோம். தண்ணீர் கேட்கிறோம். "அதோ பம்பு இருக்கிறது. அதை அடித்துத் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்கிறார். பம்பு அடிக்கும்போது 'வாஷர் தேய்ந்துபோய் இருப்பதனால் அடிக்க முடிவதில்லை. தண்ணிர் ஏறவில்லை. அதற்காக அந்த வீட்டுகாரரிடம் இருந்தே ஒரு செம்பு தண்ணீர் வாங்கி அதைவிட்டு அடிக்கிறோம். அதுவும் அந்தக் குழாயிலிருந்து வந்ததுதான். அவருடைய வீட்டுத் தண்ணீரை நிறையப் பெறுவதற்கு முன்னாலே சிறிது தண்ணீரைப் பெறுகிறோம். பின்னாலே வருகிற தண்ணீர் மிகுதியான தண்ணீர். முதலில் விடுகிற தண்ணீர் பின்னாலே வருவற்கு உதவியாகப் பயன்படுகிறது. குடம் குடமாகத் தண்ணீரைப் பின்னாலே நிரப்பு கிறோம். அதற்கு முன்னால் ஒரு செம்பு தண்ணீர் பெற்றுக் கொள்கிறோம். அதுபோல் இறைவன் பேரருள் கிடைத்தால் இன்பம் உண்டாகும். ஆனால் அந்த அருள் கிடைப்பதற்கு முன்னால் பல முயற்சிகள் செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலாக ஆரம்பத்தில் அவன் திருவருள் கிடைத்தால்தான் அந்த முயற்சிகளைச் செய்ய முடியும். அந்த அருள், சாதனத்தைப் பெறுவதற்குரிய அருள், பின்னாலே பெறும் அருள் சாத்தியத்தைப் பெறும் அருள். இராப்பகல் அற்ற இடத்தை அடைவதற்கு முன்பு நாம் செய்ய வேண்டிய காரியங்களைத் தொடங்கும்போதே அவ னுடைய திருவருள் நமக்குத் துணையாக இருக்க வேண்டும். அதை, அராப்புனை வேணியன் சேய்அருள் வேண்டும் என்கிறார். பாம்பைத் தன் சடாபாரத்தில் அணியாக அணிந்து கொண்டிருக்கும் சிவபெருமானுடைய குழந்தையாகிய முருக னுடைய அருள் வேண்டும்' என்று முதலில் சிவபெருமானை நினைக்கிறார். 226