பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 காணத் தலையின்மேல் வைத்திருக்கும் ஆண்டவனுடைய குடும்பத்தோடு தொடர்பு கொண்டால், அந்தப் பாம்பைப் போன்று வாழ்க்கை மாறி உயர்ந்த நிலையை அடைந்து விடலாம். நம் மனத்தின் தீய தன்மைகளும் மாறும், துன்பத்தைத் தருகின்ற மனம் இறைவனோடு சார்ந்து விளங்கும். இந்தக் குறிப்புடன்தான், அராப்புனை வேணியன் சேய்அருள் வேண்டும் என்றார். ஆண்டவனுடைய திருவருளைப் பெற்ற பெரியவர்கள் அந்த உடம்பில் இருந்தாலும், கருவிகரணங்களோடு பல தொழில் களைச் செய்தாலும் அவர்கள் சிவபிரானிடம் உள்ள பாம்பு போல உயர்ந்த நிலையில் ஆபரணமாக இருப்பார்கள். அப்படி இல்லாதவர்கள் தாழ்ந்த நிலையில் எல்லோரும் அஞ்சும் பொருளாக இருப்பார்கள். அன்பும் தொழுதலும் நமக்கும் அன்பை உண்டாக்கும் கருவியாகிய அருள் இறை வனிடமிருந்து வரவேண்டும். இறைவனை அடைவதற்குரிய பக்குவத்தை அந்த அருள் நம்பால் விளைவிக்க வேண்டும். இந்த அன்பு நாமாக உண்டாக்கிக் கொள்வது அன்று. - 'நினைப்பித்தால் நின்னை நினைப்பேன்" என்பர் பெரியோர். "சிந்தனைநின் தனக்காக்கி நாயினேன்றன் கண்இணைநின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குஉன் மணிவார்த்தைக்கு ஆக்கிஐம் புலன்கள் ஆர வந்தனை.ஆட் கொண்டுஉள்ளே புகுந்த விச்சை மால் அமுதப் பெருங்கடலே!" என்று மணிவாசகர் பாடுகிறார். இறைவனே அவருடைய சிந்த னையைத் தன்பால் வரும்படி ஆக்கிக் கொண்டானாம். சிந்தனையை மாணிக்கவாசகர் இறைவனுக்கு ஆக்கவில்லை; இறைவனே அவ்வாறு ஆக்கி ஆட்கொண்டான். இறைவன்பால் 228