பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் குராமலர் நமக்குத் தலை தந்த இறைவன் கால்களைப் பெற்றிருக் கிறான். தலையால் இறைவன் தாளைத் தொழல் வேண்டும். குராப்புனை தண்டையம் தாள்தொழல் வேண்டும். முருகப் பெருமான் தன்னுடைய திருவடியில் அன்பர் இட்ட குரா மலரையும், அவர் அணிந்த தண்டையையும் புனைந்திருக் கிறான். தண்டை என்பது குழந்தைக்குத் தாய்மார்கள் இடுகிற அணிகலன். இறைவன் அணிகளாலும், மலர்களாலும் தன்னுடைய திருவடிக்கு அழகு செய்து கொண்டு அன்பர்களுடைய உள்ளங் களைக் கவர்கிறான். முன்பே பணிந்த அன்பர்கள் அந்தத் திருவடி யில் குராமலர்களை அணிந்திருக்கிறார்கள். அதைக் கண்டு நாமும் மலர் தூவிப் பணிவதற்குரியது அது என்று தெரிந்து கொண்டு அதைத் தொழ வேண்டும். முருகப் பெருமானுக்கு உகந்தது குரா மலர். திருவிடைக்கழி என்னும் தலத்தில் குரா மரத்தினடியில் முருகன் எழுந்தருளி யிருக்கிறான். திருவிசைப்பாவில் சேந்தனார் குரா நீழற் கீழ் நின்ற அப்பெருமானைப் பாடியிருக்கிறார். - "கொந்து வார்குர வடியினும் அடியவர் சிந்தை வாரிச நடுவினும் நெறிபல கொண்ட வேதநன் முடியினும் மருவிய - குருநாத" என்பது திருப்புகழ். இங்கே அருணகிரிநாதப் பெருமான் இராப் பகலற்ற நிலை வருவதற்குக் குராமலர் அணிந்த முருகப் பெருமானின் தாளை நினைக்க வேண்டும் என்று பேசுகின்றார். அருணகிரியார் இராப் பகல் அற்ற அநுபவத்தை நினைக்கும்போது குராப்புனை தண் டையந் தாளையும் நினைப்பது வழக்கம். கந்தர் அலங்காரத்தில் வேறு ஒரிடத்தில், "இராப்பக லற்ற இடம் காட்டி யான்இருந் தேதுதிக்கக் குராப்புனை தண்டையம் தாள் அருளாய்” என்கிறார். திருப்புகழில் ஒரு பாட்டில் இந்த இரண்டையும் ஒருசேர வைக்கிறார். 'ஆண்டவனே, எனக்கு உலகத்தில் உள்ள மயல் போக வேண்டும். அந்த மயல் அற்ற நிலையில் உன் க.சொ.V-16 231