பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 நாம் உண்ணும்போது வேறு யாரேனும் ஒருவருக்காவது கொடுத்துச் சாப்பிட வேண்டுமென்பதை அருணகிரியார் பலமுறை வற்புறுத்தியிருக்கிறார். "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி' என்று திருமூலர் சொல்வார். நீ நொய்யாகச் சாப்பிடுவாயானால் அதில் குறுணையாகத் தர்மம் செய் என்று அருணகிரிநாதப் பெருமான் அநுபவ பூர்வமான வழியைச் சொல்லித் தந்தார். பிறருடைய பசியைப் போக்குவது போன்ற தர்மம் வேறு ஒன்றும் இல்லை. தனக்கு உணவை வைத்துக் கொண்டிருக்கிறவன் தன் னுடைய குழந்தையின் பசியைக் கண்டால் உடனே அதற்கு ஊட்டுகிறான். பசி என்கிற துன்பம் தெரியாத மனிதன் யாருமே இல்லை. ஆதலால் மற்றப் பெரிய தானங்கள் செய்வதைக் காட்டிலும் பிறனுடைய பசியை நீக்கும் தர்மம் எல்லோருக்கும் உரியது. மிகமிகப் பெரியது. அதை அடியோடு மறந்து அதனைச். செய்ய எண்ணாமல் ஏமாற்றுகிற மக்கள் உடம்பு நிலையாமையைப் பற்றிப் பேசி என்ன பயன்? சோம்பேறிகள் உலகத்தில் நல்லதைச் சொல்லுகின்ற ஆசிரியன்மார்கள் இல்லாமல் மனிதர்கள் கெட்டுப் போகவில்லை. நல்லதைச் சொல்லி விட்டுத் தாம் அவ்வாறு நடக்காமல் இருக்கிற போலிக் குருமார்களால்தான் உலகம் கெட்டுப் போகிறது. அத்தகையவர் களால் உண்மையில் அநுபூதிமான்களாக இருக்கிற நல்லவர் களுக்கும் கெட்ட பெயர் உண்டாகிறது. “ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று வாசாமகோசரமாகப் பேசுவார்கள். ஆனால் கோயிலுக்கு போகமாட்டார்கள். 'ஏன் நீங்கள் கோயிலுக்குப் போகவில்லை?" என்று கேட்டால் அப்போது ஒரு புதிய வேதாந்தத்தைச் சொல் வார்கள். 'ஆண்டவன் கோயிலில் மாத்திரம் இருக்கிறானா? ஒவ்வொருவனுடைய உடம்பிலும் இருக்கிறான். உடம்பையே கோயிலாகக் கொண்டு வாழ்கிற பெருமான் அவன்' என்று சொல்வார்கள். அப்படிச் சொல்வதற்குக் காரணம் அவர்கள் ஞானத்தில் முறுகி நின்றவர்கள் என்பது அன்று. பிறருக்கு உப தேசம் செய்து தாம் அதன்படி நடக்காத பெரிய சோம்பேறிகள் 14