பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 மனம் பதைப்பறல் மனம் தானே நின்று செயலாற்றக் கூடியது அன்று. ஐந்து வாசல் வழியாக அது தன் விளையாட்டை நடத்துகிறது. ஐந்து இந்திரியங்களின் வாயிலாகப் பெறுகிற அநுபவத்தை வைத்துக் கொண்டு தன் அரசை நடத்துகிறது. இந்த ஐந்து வாயில்களையும் அடைத்துவிட்டால் அது ஒரளவு அடங்கிக் கிடக்கும். அதற்கு மேல் இறைவனுடைய அன்பையும் பெற்றால் இருக்கிற இடத் தில் அடங்கிவிடும். ஐந்து வாசல்களையும் அடைப்பதைத் தான் இந்திரிய ஜயம் என்று சொல்வார்கள். மனத்திலுள்ள எண்ணம் சிதறுண்டு போவதற்குக் காரணம் ஐந்து வாசல்களும் திறந்து நிற்றல்தான். அரசர்கள் வரும்போது 'பராக் என்று சொல்வது உண்டு; அவர்கள் வருவதைக் கவனிக்காது வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்னும் பொருளில் அவ்வாறு சொல்வார்கள். வெளிமுகப்படுகின்ற இந்திரியங்களை ஒடுக்கி னால் மனம் சிதறுண்டு போவது நீங்கி ஒருமுகப்பட்டு நிற்கும். கொடிய ஐவர் பராக்குஅறல் வேண்டும்; மனமும் பதைப்புஅறல் வேண்டும் என்றார். மனம் என்பது ஒரு மையப்புள்ளி. அதன் நடுவில் இறைவன் இருக்கிறான். மையப் புள்ளியில் இருந்து ஒருவன் புறப்பட்டு வெளியில் செல்லச் செல்ல அதனுடைய வெளிவட்டம் விரிந்து கொண்டே போகும். அதற்கு முடிவே இல்லை. நாம் அப்படி மையப் புள்ளிக்கு நெடுந்துாரம் வெளி வட்டத்தில் இருக்கிறோம். நம்முடைய லட்சியம் நம்முடைய வட்டத்திற்குப் புறம்பே இருக்கிறது என்று எண்ணி மேலும் பயணம் செய்து கொண்டிருக் கிறோம். அதனால் இந்த வட்டம் விரிந்துகொண்டே போகிற தன்றி, இனிமேல் போக இடம் இல்லையென்று சொல்கிற முடிவைக் காண்பது இல்லை. காரணம் நாம் புறத்தே பயணம் செய்வதுதான்; நம்முடைய இந்திரியங்கள் பராக்காக நிற்றல்தான். அப்படியின்றி நாம் உள்முகமாகப் பயணம் செய்யத் தொடங் கினால் வட்டத்தின் வெளியில் எங்கே நின்றாலும் கடைசியில் மையப் புள்ளிக்குத்தான் வரவேண்டும். இங்கே வந்த பிறகு பயணம் நின்று விடுகிறது. யார் எங்கிருந்து தொடங்கினாலும் 234