பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் எவ்வளவு தூரத்தில் நின்று தொடங்கினாலும் கடைசியில் யாவரும் ஒன்று சேருகிற மையப் புள்ளி ஒன்றுதான். அதை அடைந்தவர்களுக்கு வேறு லட்சியமோ பொருளோ இல்லை; போக இடமும் இல்லை. பராங்முகமாக இருக்கிற இந்திரியங் களை மாற்றி, மனத்தை உள்முகமாகச் செலுத்தி, மனத்திடையே இருக்கிற மையமாகிய குராப்புனை தண்டையந் தாளை நோக்கி நின்றால் அதற்கு மேல் நினைவும், செயலும், உரையும் இன்றி அங்கேயே இராப்பகல் அற்ற அநுபவம் வந்துவிடும். மனம் பதைப்பதற்கு இப்போது எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அது விரிந்து விரிந்து செல்கிற பிரபஞ்சச் சுழலில் சிக்குண்டு கிடக்கிறது. விருப்பு வெறுப்புகளால் தாக்குண்டு நிற்கிறது. பழைய அநுபவ வாசனையும், இப்போது உள்ள அநுபவமும், இனிப் பெற வேண்டிய அநுபவத்தின்பால் உள்ள ஆசையும் சேர்ந்து அதை அலைக்கழித்துக் கொண்டே இருக் கின்றன. இவையெல்லாம் மாற வேண்டுமானால் நம்முடைய மனம் விரிந்து இறைவனுடைய தாளைப் பற்றிக் கொண்டு அன்பு மலரவேண்டும். இந்திரியங்கள் பராக்கு அறல்வேண்டும். அன்பு விரிவடைந்து, இந்திரியங்கள் பராக்கு அற்றால், மனம் பதைப்பு அற்று ஒருமை நிலைக்கு வரும். அப்போது இராப்பகல் அற்ற நிலை வந்துவிடும். சுற்றிச் சுற்றி அலைந்த குழந்தை கண்ட கண்ட இடங்களில் விளையாடி அழுக்கைச் சேர்த்துக் கொண்டு அதனால் தூய்மை கெட்டு, உடம்பில் காயத்தையும் அடைந்து வருந்துகிறபோது தாய் அதனைத் தன் வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு வருகிறாள். மெல்ல வீட்டின் எல்லைக்குள் வந்த குழந்தை, பின்பு வீட்டுக் குள்ளும், அறைக்குள்ளும் செல்கிறது. அதைத் தொட்டிலில் போட்டுத் தாய் தாலாட்டுப் பாடுகிறாள். அதைத் தா, இதைத் தா என்று கேட்டு அழுவதையும் விட்டுவிட்டு, தாயின் தாலாட்டுப் பாட்டில் அது மனம் செலுத்தி ஒன்றுபடும்போது அப்படியே கிடந்து தூங்கிவிடுகிறது. அந்த வகையில் பிரபஞ்சம் முழுவதும் தன் ஆசைக் கரத்தை நீட்டி ஐந்து இந்திரியங்கள் என்னும் வாசல்களின் வழியே எப்போதும் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிற மனம், வெளியே போவதை நீக்கி உள்ளே இருக்கும் எம்பெருமான் திருவடிக் கீழே 235