பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 கொள்ளலாம். இந்த நூல் வாழ வழிகாட்டும் நூல். செத்துப் போகவும் வழி காட்டுகிறது. இப்படிச் சொன்னால் வேடிக்கையாகத் தோன்றும். நன்றாக வாழ்வது எப்படி இன்பந் தருகிறதோ அப்படியே நன்றாகச் செத்துப் போவதும் இன்பத்தைத் தரும். சாவு என்பதே துன்பத்தில் துன்பமாக இருப்பது; அதில் இன்பம் எது? என்று தோன்றும். வாழ்வு துன்பமாக இல்லையா? உலகிலுள்ள மனிதர்கள் யாவரும் இன்ப வாழ்வா வாழ்கிறார்கள்? இல்லை இல்லை, இன்பமாக வாழ்கிறார் என்று எண்ணிக் கொண்டிருக்கிற பலருடைய மனத்துக்குள் புகுந்து பார்த்தால் அங்கே எத்தனை புயல்கள் கொந்தளிக்கின்றன என்பது தெரியவரும். உண்மையில் இந்த உலகில் முழு வாழ்வு வாழத் தெரிந்த வனுக்கு அந்த உலக வாழ்வு இதனுடைய தொடர்ச்சியாகவே இருக்கும். அப்படி வாழ்கிறவன் இது வேறு வாழ்வு, அது வேறு வாழ்வு என்று பிரித்து நினைக்கமாட்டான். இருபத்தைந்து வயசில் உத்தியோகம் பண்ண ஐந்து வயசில் கல்வியைத் தொடங்குவது போலவும், அறுபது வயசில் துணையாக இருக்கப் பிள்ளை வேண்டுமென்று இருபத்தைந்து வயசில் திருமணம் செய்து கொள்வது போலவும் மறுமையில் நன்கு வாழ வேண்டுமென்று இம்மையிலே அடிப்படை அமைக்க வேண்டும். இங்கே அமைதி பெற்றவன், அங்கே அமைதி பெறுவான். இங்கே அச்ச மில்லாதவன் அங்கே அஞ்சமாட்டான். இந்த வாழ்வும் அந்த வாழ்வும் ஒரு முழு வாழ்வின் இரு வேறு பகுதிகள். இம்மை வாழ்வு அடிப்படையானால் அம்மை வாழ்வு மேல் கட்டிடம். ஆகவே, நம்முடைய நாட்டில் இம்மை வாழ்வில் நிகழ்த்தும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் மறுமை வாழ்வுக்குரிய தொடர்புகளை வைத்திருக்கிறார்கள். இங்கும் அங்கும், இன்றும் அன்றும் நமக்கு உறவினனாக இருக்கும் இறைவனுடைய திருவருளை இம்மையிலேயே பெற வழிதுறை வகுத்திருக்கிறார்கள். இந்த வாழ்விலேயே அந்த வாழ்வின் மணத்தை நுகரலாம் என்று கூறுவது இந்த நாட்டுச் சமயம். ஜீவன் முக்தி என்பது அதுதான். செத்த பிறகு சிவலோகம், வைகுந்தம் என்று சொல்லித் 24C)