பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 அதனால் ஆர்வமும் அது காரணமாக முயற்சியும் அந்த இடத்தில் எழும். ஆகையால்தான் நம்முடைய ஊரிலேயே கோயில் இரு தாலும் காசி என்றும், இராமேசுவரம் என்றும், பழனி என்றும், செந்தூர் என்றும் நாம் போகிறோம். : - - பெயரைச் சொல்லுதல் . . ; ஏதேனும் ஒரு பொருளுக்கு மதிப்பு இருக்குமானால் அதை நாம் அடைவதுமட்டும் நமக்குப் பெருமை என்பது இல்லை. அதைப் பற்றிச் சொல்வதையே ஒரு பெருமையாகக் கருது கிறோம். தலத்திற்கு மதிப்பு இருப்பதைப் போலவே தவத்தி னுடைய திருநாமங்களுக்கும் மதிப்பு உண்டு. அருணாசலம் என்று நினைத்தாலே போதும் என்று சொல்வார்கள். ஒருவரை நாம் அடைவதற்கு முன்னாலேயே அவரை அடைய வேண்டு மென்ற ஆசை மிக வேண்டுமென்றால் அவரைப் பற்றிய நினைப்பு அதிகமாக வேண்டும். தலங்களில் போய் இறைவனை வழிபடுவதற்கு முன்னால் தலங்களைப் பற்றிய எண்ணம் நம் முடைய உள்ளத்தில் முறுகவேண்டும். கோயிலுக்குப் போகா விட்டாலும் கோயில் கோயில் என்று சொல்லிக் கொண்டிருந்தால் ஏதேனும் ஒருநாள் போகின்ற முயற்சி நமக்கு உண்டாகும். தலங்களுடைய நினைப்பை நமக்கு அதிகமாக்குவதற்குப் பல முறைகளைப் பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். தலங் களின் பெயரைக் குழந்தைகளுக்கு வைப்பது உண்டு. ஏழுமலை என்று ஒருவர் கூப்பிடுகிறார்; உடனே திருப்பதி நமக்கு நினைவு வருகிறது. அருணாசலம், வேதாசலம் என்று பெயர்கள் வைப்பதை நம் நாட்டில் பார்க்கிறோம். பழனி என்று பெயர் உடையவர் களும் பலர் இருக்கிறார்கள். அந்தப் பெயர்களைக் கேட்கும் போதெல்லாம் அந்த அந்தத் தலங்களைப் பற்றிய நினைப்பு நமக்கு வரவேண்டும். ஆகையால்தான் அத்தகைய பெயரை வைப்பது வழக்கமாக இருக்கிறது. இறைவனைத் தரிசிப்பதோடு அதற்கு முன்பே இறைவன் திருநாமத்தைச் சொல்வதனால் ஒருவகைப் பயன் இருப்பது போல, தல தரிசனத்திற்கு முன் தலத்தின் பெயரைச் சொல்வதிலும் பெருமை உண்டு. அதை முதல்படி என்றுகூடச் சொல்லலாம். அந்த முதற்படியைக்கூட நீ மிதிக்கவில்லையே! என்று இரங்குகிறார் அருணகிரியார். "நீ 252