பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனித் திருநாமம் ஆண்டவன் பெயரைச் சொல்லாவிட்டாலும் அவன் இருக்கிற ஊரையாவது சொல்லக்கூடாதா?’ என்கிறார். தமிழில் ஒரு பழமொழி உண்டு, 'ஊரைச் சென்னாலும் பேரைச் சொல்லக் கூடாது' என்று. பழங்காலத்தில் பெரியவர் களின் பெயரைச் சொல்லும் வழக்கம் இல்லை. பெயர் இரக சியம் என்பது அல்ல. பெரியவர்களுடைய பெயரைச் சொல்வது மரியாதையாகாது. ஆனாலும் அவர்களை எப்படிக் குறிப்பது? அவருடைய ஊரையிட்டுக் குறிப்பது வழக்கம். அந்த வழக் கத்தை இப்போது சங்கீத வித்துவான்களிடம் பார்க்கலாம். முசிரி, அரியக்குடி, செம்மங்குடி என்று பேசுகின்றோம். பழங்காலத்தில் பெரியவர்களைக் கூறும்போது கூடலூர் கிழார், அரிசில் கிழார் என்று சொல்வார்கள். அவர்களுடைய சொந்தப் பெயர் நமக்குத் தெரியாது. ஊர்ப் பெயர்களுக்கே ஒரு பெருமை உண்டு. இங்கே அருணகிரியார் சொல்கிறார், 'நீ ஆண்டவன் பெயரைச் சொல்லாவிட்டாலும் அவன் இருக்கிற ஊரின் பெயரையாவது சொல்லக்கூடாதா, சொல்லவில்லையே” என்கிறார். ஆண்டவன் திருவருளால் இன்ப அநுபவத்தை அடைய வேண்டுமென்ற ஆசை நமக்கு இருக்கிறது. ஆனால் அதற்குரிய முயற்சிகளைச் செய்வதற்கு மனம் இல்லை. சோம்பேறியாக இருக்கிறோம். எந்த இன்பமும் திடீரென்று கிடைக்காது. ஒவ்வொரு காசாகச் சேர்த்தால் ரூபாயாவது போல, ஒவ்வொரு சிறு முயற்சியும் சேர்ந்து பெரிய முயற்சியாகிப் பெரிய பயன் கிடைக்கிறது. பெரிய காரியமாகிய அருளநுபவத்திற்குச் சின்ன முயற்சிகள் காரணமாகின்றன. அந்த முயற்சியை மெல்ல மெல்ல நமக்குச் சொல்லித் தருவாரைப் போல, எதிர்மறை வாயிலாக அருணகிரி யார் சொல்கிறார். 'ஆண்டவன் பெயரைச் சொல்வது கிடக் கட்டும். முதலில் அவன் உறைந்திருக்கிற ஊரையாவது சொல்லத் தெரிந்து கொள். நீ அதைத் தெரிந்து கொள்ளவில்லையே! என்று நம் நெஞ்சைப் பார்த்துச் சொல்கிறார். படிக்கின்றிலை பழனித் திருநாமம். பழனியின் பழஞ்சிறப்பு பழனி ஆறுபடை வீடுகளில் ஒன்று. திருமுருகாற்றுப் படையில் ஆறுபடை வீடுகளை நக்கீரர் சொல்கிறார். ஆறுபடை 253