பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 ஏற்படுத்த வேண்டும் என்று அவர் எண்ணினார். ஒரு மாம் பழத்தைக் கையில் கொண்டு சிவபெருமானை நோக்கிப் போனார். அப்போது சிவபெருமானும் உமாதேவியாரும் முருகப் பெருமான், விநாயகர் ஆகியோருடன் ஒருங்கே வீற்றிருந்தார்கள். அந்தச் சமயத்தில் நாரத முனிவர் அந்தப் பழத்தைச் சிவ பெருமானுடைய திருக்கரத்தில் ஈந்தார். மிக்க அன்புடைய தந்தையோ, தாயோ தமக்கு ஏதேனும் ஒரு தின்பண்டம் கிடைத் தால் அருகில் இருக்கிற குழந்தைக்கு அதைத் தந்துவிடுவது வழக்கம். அதுபோலப் பழத்தைப் பெற்ற சிவ பெருமான் தம்முடைய குழந்தைகளுக்கு அதைக் கொடுக்க வேண்டுமென்று எண்ணினார். ஒரு பழத்தை விண்டு இரண்டு பேருக்கும் பாதி பாதியாகக் கொடுக்க விரும்பவில்லை. உலகத்து மக்களாக இருந்தால் பழத்தை வெட்டிக் கொடுத்துவிடலாம். தெய்வக் குழந்தைகள். ஆகவே இந்தப் பழத்தை அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதன் மூலம் உலகத்திற்கு ஒரு நல்ல பயனை உண்டாக்க வேண்டுமென்று இறைவன் கருதினான். 'இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறாரோ அவருக்கு இந்தப் பழம் உரியது” என்று ஒரு பந்தயம் வைத்தான். உடனே முருகன் தன் மயில்மேலேறி உலகை வலம் வரப் புறப்பட்டுவிட்டான். சிறிது நேரம் சும்மா அமர்ந்திருந்த கணபதி மெல்லத் தம்முடைய தொந்தி வயிற்றைத் தூக்கிக் கொண்டு மிகவும் நிதானமாகத் தம் தாய் தந்தையர்களை வலம் வந்தார். மூன்று முறை வலம் வந்து வணங்கிப் 'பழத்தைத் தாருங்கள்' என்று கேட்டார். 'நீ உலகத்தை வலம் வரவில்லையே; எப்படி உனக்குப் பழம் கொடுப்பது?" என்று சிவபெருமான் கேட்க, 'எல்லா உலகங்களும் உங்களிடத்தில் அடங்கியிருக்கின்றன. ஆதலால் எல்லாப் பிரபஞ்சங்களையும் ஒரு முறைக்கு மூன்று முறையாக நான் சுற்றிவிட்டேனே' என்று விநாயகர் சொன்னார். அந்த உண்மையை எப்படி மறுக்க முடியும்? ஆகவே மறுமொழி சொல்லாமல் சிவபெருமான் அந்தப் பழத்தைக் கணபதியிடம் கொடுத்துவிட்டான். வாங்கிக்கொண்ட பழத்தை தம் தம்பி வருவதற்கு முன்னா லேயே அவர் தின்றிருக்கலாம். ஆனால் பின்னாலே நிகழ்கின்ற காரியங்களுக்கு ஏற்றபடி நிகழ்ச்சி அமைய வேண்டாமா? முருகன் 25Յ