பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனித் திருநாமம் தடவை அங்கே சென்று வந்திருக்கிற அன்பர்கள் இருப்பார்கள். அவர்கள் பழனி பழனி என்று அநுபவ நினைவுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடத்தில் போய் அவர்கள் காலைப் பிடித்துக் கொண்டு வணங்கத் தோன்றும்; அதை நீ செய்ய வில்லையே!' என்கிறார். பழனி அநுபவத்தை வெறும் சொல்லால் தெரிந்து கொள்வது முடியாது. அங்கே போய் வந்தவர்கள் பெற்றிருக்கிற கிளர்ச்சியைக் கண்டால் நமக்கு அதன் பால் மதிப்பு உண்டாகும். 'அத்தகையவர்களைப் பார்த்து நீ அவர்களுடைய தாளில் வீழ்ந்து வணக்கம் செய்யவில்லையே! என்கிறார். படிப்பவர் தாள் முடிக்கின்றிலை. முதலில் ஆண்டவன் இருக்கிற தலத்தை நினைக்க வேண்டும்; பின்பு அந்தத் தலத்திற்குச் சென்று நலம்பெற்ற அடியார்களோடு சேரவேண்டும் என்ற இரண்டைச் சொன்னார். தலத்தை நினைந்து அந்த நினைவால் அங்கே சென்றவர்களைக் கண்டு பழகவேண்டும். அவர்களுடைய பழக்கத்தால் அந்தத் தலத்தின் வரலாறுகள் நமக்குப் புலனாகும். அங்கே அவர்கள் தாம் பெற்ற அநுபவங் களைச் சொல்லும்போது நாமும் அங்கே போக வேண்டும் என்ற ஆர்வம் மிகும். மூர்த்தியின் நாமம் அடுத்தபடி அந்தத் தலத்திற்குப் பெருமை அளிக்கும் மூர்த்தி யின் நினைவு வரும். நமக்கும் அந்தப் பெருமானைக் காண வேண்டுமென்ற ஆசை எழும். அங்கே போகவேண்டுமென்பதற்கு முன்பே அவனுடைய திருநாமத்மைச் சொல்லத் தொடங்கு வோம். 'இந்த மூன்றாவது படிக்கு நீ போகவில்லையே!' என்று சொல்வது போல, முருகா என்கிலை என்றார். முதலில் பழனி பழனி என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். பின்பு அந்தத் தலத்திற்குப் போனவரைக் கண்டு வழிபடவேண்டும். பின்பு அவர்கள் வழிபட்ட முறைகளைத் தெரிந்து, அந்த ஊரில் உள்ள மூர்த்தியைப் பற்றித் தெரிந்து, அவனுடைய திருநாமத்தைச் சொல்ல வேண்டும். ஆக மூன்று படிகளைச் சொன்னார். 259