பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 'முருகா என்கிலை' என்பது ஏதோ ஒரு விலாசத்தைச் சுட்டிச் சொன்னது போன்றது அல்ல. பழனியின் திருநாமத்தைப் படித்துப் பின்பு அங்கே போனவர்களைக் கண்டு அவர்கள் பெற்ற அநுபவத்தை நமக்குச் சொல்ல, அந்த அநுபவத்தை அருளிய பெருமான் என்று நினைவோடு அந்த நாமத்தைச் சொல்ல வேண்டும். அது வெறும் அடையாளம் அன்று நம் உள்ளத்தில் ஆர்வத்தை விளைக்கின்ற சொல். பற்று அறுதலும் கொடையும் மனிதர்களுடைய துன்பத்திற்குக் காரணமாக இருப்பது பற்று. தன்வீடு, தன் இனம், தன் மனையாட்டி என்கிற பற்றுக் களை மனிதன் வளர்த்துக் கொள்ள வளர்த்துக் கொள்ள அவன் துன்பத்தை மிகுதியாக அநுபவிக்கின்றான். பற்று நீங்கும்போது இன்பம் உண்டாகும். பற்று முற்றும் நீங்கும்போது வீடு கிடைக்கும். - “அற்றது பற்றெனில் உற்றது வீடு.” நம்முடைய ஊர், நம்முடைய வீடு, நம்முடைய சுற்றத்தார் என்று பற்று வளராமல் இருக்க வேண்டுமானால் இந்த மூன்றுக்கும் மாற்றாக மூன்று பொருள் வேண்டும். இறைவனுடைய ஊரி னிடத்தில் அன்பு வந்தால் நம் ஊரைக் காட்டிலும் அந்த ஊரில் பற்று அதிகமாகும்; நம் ஊர்ப் பற்றுக் குறையும். நம்முடைய வீட்டை மறந்து இறைவன் திருக்கோயிலிடத்தில் பற்றுக் கொள்ள வேண்டும். அப்படியே இறைவனுடைய அடியார்களைச் சுற்ற மாக மதிப்பது, அவர்களுக்கு வழிபாடு செய்வது என்று வந்தால் நம்முடைய உடலுக்கு இன்பம் தருகிற சுற்றத்தார்களையே எண்ணியிருக்கும் நிலை மாறும். இறைவனுடைய அன்பு உள்ளத் தில் ஏற ஏற, நான், எனது என்ற எண்ணங்கள் மாறிப் பொருள் முதலியவற்றில் உள்ள ஆசை மெல்ல மெல்லக் கழலும். நான்கா வது படியாகிய பற்றுக் கழன்ற நிலையைச் சொல்ல வருகிறார். பற்றுக் கழல்வது எப்படித் தெரியும்? தனக்குக் கிடைத்த ஒரு பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறவன் பற்று உடையவன். பிறருக்கும் கொடுக்கவேண்டுமென்று நினைத்தால் அவனுடைய பற்றுக் கொஞ்சம் குறைந்தது என்று தெரிந்து கொள்ளலாம். தம்மிடம் 26O.