பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனித் திருநாமம் உள்ளன எல்லாம் இறைவனுடைய அடியார்களுக்கே உரியன என்று எண்ணுகிறவர்களுக்கு இறைவனுடைய பக்தி முறுகி நிற்கும். நாயன்மார்கள் அப்படி வாழ்ந்தார்கள். தலத்தினுடைய பெயரைச் சொல்லி, தலவழிபாடு செய்த அன்பர்களை வழிபட்டு, தலத்தில் எழுந்தருளி இருக்கும் மூர்த்தியினுடைய நாமத்தை உள்ளக் கசிவோடு சொல்கிற பக்குவம் வந்தால் பற்றிக் கொண் டிருக்கும் பொருள்களிடத்தில் பிடிப்பு அற்றுவிடும். பிறருக்கும் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். இறைவனுடைய அன்பர்களையே உறவினர்களாகப் பெற்று அவர்களுக்கு வேண் டியவற்றைக் கொடுக்க வேண்டுமென்ற பக்குவம் உண்டாகும். 'அப்படி நீ இடாமல் இருக்கிறாயே!' என்று அடுத்தபடி சொல்கிறார். முசியாமல் இட்டு மிடிக்கின் றிலை. முசித்தல் - சலித்தல். எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் பிறனுக்குக் கொடுப்பதனாலே பெயர் வரும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் கணக்காகத்தான் தர்மம் செய்வான். பொருளில் பற்று உள்ளவன் புகழிலும் பற்றுப் பெற்றுச் செய்வது அது. அப்படியின்றி அடியார்களிடத்தில் மாத்திரம் பற்று உள்ள வர்கள் பொருளைப் பெரிதாகக் கருதாமல் தம்மிடத்தில் எது இருந்தாலும் கொடுத்துவிடுவார்கள். மனைவியைக் கொடுத்த வருடைய உள்ளமும், மகனைக் கொடுத்தவருடைய உள்ளமும், கண்ணைக் கொடுத்தவருடைய உள்ளமும் அத்தகைய நிலையில் இருப்பவை. எல்லாவற்றையும் கொடுத்துவிட வேண்டுமென்ற எண்ணம் இருக்கும்போது எதைக் கொடுப்பது, எதைக் கொடுக்கக் கூடாது என்று வேறுபடுத்திப் பார்க்கிற ஆராய்ச்சிக்கு இடம் இல்லை. ஆடையைக் கொடுக்கிறவன் ஆடை அளவில் பற்று நீத்தவன் ஆகிறான். கண்ணைக் கொடுத்தவன் உடல் அளவில் பற்று நீத்தவன். மனைவியையே கொடுத்தவன் உணர்ச்சியையும் நீத்து விட்டவன். இட்டு மிடித்தல் இறைவன்பால் அன்பு முதிர முதிர நம்முடைய பொருளை அடியார்களுக்குக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வமும், கொடுக்கும் முயற்சியும் வளர்ந்துவரும். இந்த நாட்டில் தானம் செய்வதற்கு 26主