பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 ஆனால் மற்றொரு வீட்டில் அந்த அழுகை இருந்துகொண்டே இருக்கிறது. இரண்டு இடத்திலும் இடுப்பு வலியினால் பெண் மணிகள் அழுதாலும் ஒரு விட்டில் அழுத அம்மாளுக்கு வாயு வலி. மற்றொருத்திக்குப் பிரசவ வேதனை. இரண்டு பேரும் வேதனைப்பட்டு அழுதாலும் குழந்தை பெற்றவளுடைய வேதனை இன்பவேதனை ஆகிவிட்டது. இந்த இரண்டு பேருடைய அழுகையும் ஒன்றாகா. அதுபோல் நம்முடைய அழுகை துயரம் காரணமாக வருவது. ஆனந்தம் பெற்றவர்களுடைய அழுகை வேறு. இராமகிருஷ்ண பரமஹம்சர் இரண்டுக்கும் வேறுபாடு சொல்கிறார். தாயுமானவர் ஆனந்தத்தின் விளைவாக வரும் அழுகையைப் பற்றிப் பாடுகிறார். "பெற்றவட்கே தெரியும்.அந்த வருத்தம் பிள்ளை பெறாப்பேதை அறிவாளோ? பேரா னந்தம் உற்றவர்க்கே கண்ணிகம் பலையுண் டாகும் உறாதவரே கன்னெஞ்ச முடைய ராவார்.” கூத்தாடல் குடத்தில் கள்ளை நிறைத்து வெயிலில் வைத்தால் அந்தச் குடம் ஆடும். பதிற்றுப்பத்தில் ஒரு பாடலில் இச்செய்தி வரு கிறது. ஒரிடத்தில் அந்தமாதிரி குடங்கள் ஆடிக் கொண்டிருன்றன வாம். அதனால் அந்த இடத்தை, தசும்பு துளங்கிருக்கை" என்று புலவர் சொல்கிறார். அது போல இறைவனுடைய பக்தியாகிய கள்ளை உண்ட மனிதனுடைய உடம்பு சும்மா இருக்காது. ஆடும்; அசையும்; குதிக்கும். 'உள்ளத்தே விளைந்த கள்ளே” என்று அபிராமிபட்டர் சொல்கிறார். பக்தியில் முறுகி நின்றவ களுக்கு, அருகில் இருப்பவர்கள் நம்மைக் கவனிப் பார்களே பரிகசிக்கப் போகிறார்களே என்ற எண்ணம் தோன்றாது; கூத்தாடு வார்கள். "ஆடு கின்றிலை கூத்துஉடையான் கழற்கு அன்பிலை என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின்றதும்இலை துணைஇலி பிணநெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோறலறிலை செய்வதொன் றறியேனே 264