பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை அழுகை அழுகையில் இரண்டு வகை உண்டு. ஏங்கி அழுவது ஒன்று; தேங்கி அழுவது ஒன்று. இறைவன் திருவருள் நமக்குக் கிடைக்க வில்லையே என்று விம்முவது உண்டு. கிடைத்த பிறகு ஆனந்தத் தால் விம்முவதும் உண்டு. முதலில் உண்டாவது ஏக்கக் கண்ணி, பின்னால் உண்டாவது ஆனந்தக் கண்ணிர் பக்தர்களிடத்தில் இரண்டும் உண்டாகும். சாதன நிலையில் இருப்பவர்களுக்கு இறைவன் திருவருள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தினால் கண்ணிர் உண்டாகும். சாத்திய நிலையை அடைந்தவர்களுக்கு ஆனந்த நிறைவினாலே கண்ணிர் உண்டாகும். இங்கே பயனைச் சொல்கிறார். பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மி நடிக்கின்றிலை, ஐந்து நிலை இதை ஐந்தாவது நிலையாகச் சொன்னார். முதலில் தலத் தினுடய திருநாமத்தைச் சொல்வது. பின்பு சாது சங்கத்தைச் சேர்தல். அதன் பின்பு இறைவன் திருநாமத்தைச் சொல்லுதல். நான்காவது நிலை இறைவனிடத்தில் பக்தி முறுக முறுகப் பொருள்களிடத்தில் பற்றற்றுத் தம்மிடம் இருப்பனவற்றையெல் லாம் பிறருக்குக் கொடுத்தல். பின்பு உணர்ச்சி விஞ்சிச் சாதனம் செய்து பரமானந்த நிலை பெற்று உடம்பையே மறந்து நிற்றல். ஆக ஐந்து படிகளை இந்தப் பாட்டில் சொன்னார். இப்போது வரிசையாக அவற்றை மீட்டும் நினைத்துப் பார்க்கலாம். 'நீ பழனி என்ற தலத்திற்குப் போகாவிட்டாலும் அந்தப் பெயரையாவது கேட்டுத் தெரிந்து கொண்டாயா? இல்லையே! தெரிந்து அதைப் பலதடவை சொன்னாயா? சொல்லி அந்த ஊருக்குப் போகவேண்டுமென்ற ஆசை உண்டாகி, போனவர்களை யாவது போய்ப் பார்த்து அவர்கள் காலில் விழுந்தாயா? அதுவும் இல்லையே! அப்படி விழுந்திருந்தால் அவர்களிடம் பழனியைப் பற்றிக் கேட்கலாமே! கேட்டபிறகு அங்கேயுள்ள முருகனைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கலாமே. முருகனுடைய திருநாமத்தைத் தெரிந்துகொண்டு அதைச் சொன்னாயா? அப்படி அடிக்கடி சொல்லியிருந்தால் உன் உள்ளத்தில் பக்தி முறுகி இருக்கும். உன் 2ՅՅ