பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்த குற்றம் என்ன? னாலும் அது சத்தியம் ஆவதில்லை. சத்தியம் சொல்வதனால் தீமை உண்டாகுமானால் அதைச் சொல்வதைக் காட்டிலும் சொல்லாமல் இருக்கலாம். நல்லது நடப்பதற்காக ஒரு பொய் சொன்னால் அது பொய் ஆகாது என்று பெரியவர்கள் சொல்வர். பொல்லாதவன் ஒருவன் வேறு ஒருவனைக் கொல்ல வேண்டு மென்று துரத்திக்கொண்டு வருகிறான். ஒடி வருகிறவன் நம் வீட்டில் வந்து ஒளிந்து கொள்கிறான். துரத்தி வந்தவன் நம்மிடம் வந்து, "இங்கே எவனாவது வந்து ஒளிந்திருக்கிறானா?” என்றால் உடனே, "ஆம், இதோ இருக்கிறான்' என்று காட்டினால் நாம் அரிச்சந்திரன் ஆகிவிடமாட்டோம். 'அவனை நாம் அறியேனே' என்று சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால் அது பொய் அல்லவா என்று கேட்கலாம். வாய்மை என்றால் என்ன? "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொல்ல' என்பர் வள்ளுவர். யாருக்கும் தீங்கு உண்டாகாமல் உண்மையைச் சொல்ல வேண்டும். நீங்கு உண்டாகும்படியாகச் சொன்னால் அது உண்மையாகாது. அதைச் சொல்லாமல் இருப்பதே நல்லது. அதற்கு மாறாகப் பொய்யாக இருந்தாலும் குற்றமற்ற நன்மை உண்டாகுமாயின் அது உண்மைக்கு ஒப்பாகும். "பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்' என்பது குறள். அலங்காரம் பொய்யில் இரண்டுவகை உண்டு. ஒருவகைப் பொய், சொல்கிறவனுக்குப் பொய் என்று தோன்றும்; கேட்கிறவனுக்குத் தெரியாது. இது வஞ்சனையாகும். மற்றொரு வகை, சொல்கிற வனுக்கும் கேட்கிறவனுக்கும் பொய் என்று தெரியும். இதற்குக் கற்பனை என்று பெயர். கம்பன் முதலிய புலவர்கள் இந்த வகையில் எத்தனையோ பொய் சொல்லியிருக்கிறார்கள். அவர் களுடைய கற்பனைகள் உண்மை அல்ல; பொய். ஆனால் இவற்றைக் கண்ட யாரும் ஏமாறுவதில்லை. படிக்கிறவர்களுக்கு இவை கற்பனை என்று தெரியும். இவற்றைப் புலவர் கற்பனை (Poetic ||lusion) orgötuff.