பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பந்தம் அற நினையெணாப் பாவிகள்தம் நெஞ்சம் பகீர்என நடுங்கும் நெஞ்சம்; பரமநின் திருமுன்னர்க் குவியாத வஞ்சர்கை பலியேற்க நீள்கொ டுங்கை சந்தம்மிகு சென்னையிற் கந்தகோட்டத்துள்வளர் தலம்.ஒங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே." ஒருவன் மிக நன்றாகத் தலைக்கு வேண்டிய அலங்காரங்களைச் செய்து கொண்டிருக்கிறான். அரசன் முடி புனைந்திருக்கிறான். என்ன அலங்காரம் செய்து கொண்டாலும் இறைவனுடைய திருவடியில் வணங்காத தலை எதற்கும் பயன் இல்லை. வள்ளுவர் சொல்கிறார்: 'கோள்இல் பொறியின் குணம்இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை." இறைவனுடைய திருவடியை வணங்குவதற்கு நமக்குத் தலை இருக்கிறது. அந்தக் கடமையைச் செய்யாவிட்டால் கேளாத காது போலவும், காணாத கண் போலவும், மணத்தைத் தெரிந்து கொள் ளாத மூக்குப் போலவும் பயனற்றதாகிவிடும் என்று சொல்கிறார். இறைவனுடைய திருவடியை வணங்காத தலையைப் பற்றி இராமலிங்க சுவாமிகள் வேறு ஒரிடத்தில் சொல்வது மிகவும் சுவையாக இருக்கிறது. “வீட்டுத் தலைவநின் தாள்வணங் கார்தம் விரிதலைசும் மாட்டுத் தலை, பட்டி மாட்டுத் தலை; புன் வராகத்தலை; ஆட்டுத் தலைவெறி நாய்த்தலை; பாம்பின் அடுந்தலை;கற் பூட்டுத் தலை:வெம் புலைத்தலை; நாற்றப் புழுத்தலையே' என்று அவர் நாகரிகமாக வைகிறார். இந்தத் தலையை உடை யவனை, 'மாடே, பன்றியே, ஆடே, நாயே என்று வையாமல் தலையை வைவது போலச் சொல்கிறார். அருணகிரியார் கூறுவது இங்கே அருணகிரியார் முருகப் பெருமானைப் பார்த்து, 'உன்னுடைய திருவடியை வணங்காத தலையும், உன்னுடைய 275