பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 திருவடியின் பேரெழிலைக் காணாத கண்ணும், அதனைத் தொழாத கையும், அதனைப் பாடாத நாவும் பிரமன் எனக்கென்றே அறிந்து படைத்திருக்கிறானே' என்று குறைப்பட்டுக் கொள்கிறார். கோடாத வேதனுக்கு யான் செய்த குற்றம்என்? குன்றுஎறிந்த தாடாள ணே,தென் தணிகைக் குமரநின் தண்டைஅம்தாள் சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாதகையும் பாடாத நாவும் எனககே தெரிந்து படைத்தனனே! "ஆண்டவனே! உன்னுடைய ஆணையைத் தாங்கி இந்த உலகத்தை யெல்லாம் நெறி தவறாமல் படைக்கும் வேலையை உடைய பிரமன் சிறிதும் பட்சபாதம் இல்லாதவன் என்று எனக்குத் தெரியும். எல்லா உயிர்களையும் அவரவர்களுடைய வினைக்கு ஏற்றபடி படைத்திருக்கிறான். அப்படி இருந்தும் என் அளவில் அவன் ஏதோ தவறு செய்துவிட்டான் என்று தோன்றுகிறது. நான் அவனுக்கு எந்தவிதமான குற்றமும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்தும் எனக்கு வேண்டாத உறுப்புக்களை அளித்திருக் கிறானே! ஒரு கால் என்னையும் அறியாமல் அவனுக்கு ஏதாவது தவறு செய்துவிட்டேனோ? நானே அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள இயலாது. ஆகையால் உன்னைக் கேட்கிறேன் என்று சொல்வதுபோல இந்தப் பாட்டை அமைத்திருக்கிறார். பிரமனைப் பற்றிக் குறை கூறும் போதே அவனை உயர்வாகவே சொல்கிறார். கோடாத வேதன் மனிதர்கள் முற்பிறவியில் செய்திருக்கும் புண்ணிய பாவங் களுக்கு ஏற்றபடி அநுபவங்களை அடுத்த பிறவியில் தரவேண்டு மென்பது பிரமன் பெற்ற ஆணை. அவன் அந்த ஆணையைச் சரிவர நிறைவேற்றிக் கொண்டு வருகிறான். அதில் சிறிதும் கோடுவது இல்லை. அதனால், கோடாத வேதன் என்று அருணை முனிவர் சொன்னார். "அப்படி இருந்தும், என் அளவிலே ஏதோ தவறு செய்கிறான் போல இருக்கிறது" என்றும் சொல்கிறார். 'பிரமன் தன்னுடைய வேலையைச் செய்வதற்கு ஏற்ற அறிவு படைத்தவன். எப்போதும் வேதத்தைச் சொல்லிக் 276