பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்த குற்றம் என்ன? கொண்டிருப்பவன். வேதம் நித்தியமானது. அதைச் சொல்லித் தன்னுடைய தொழிலில் சிறிதும் பிசகு ஏற்படாமல் செய்கிறவனாக அவன் இருந்தும், எனக்குச் சரியான வகையில் உறுப்புக்களை அமைக்கவில்லையே!' என்று குறை கூறுகிறார். வேலைக்காரன் குறை வேலைக்காரன் ஒருவனுக்குக் கணக்குப் பிள்ளை அபராதம் போட்டுவிட்டான். எதற்குப் போட்டான் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் தன் மனம் அறிந்து ஒரு தவறும் செய் தான் இல்லை. 'நான் ஒரு நாளைக்குக்கூட நேரம் கழித்துப் போனதில்லையே! எந்த நாளிலும் நான் அங்கே துங்கினதில் லேயே நேரம் தவறாமல் சென்று செய்ய வேண்டியவற்றை எல்லாம் சரியாகச் செய்கிறேனே! அப்படி இருக்க, இந்தக் கணக்குப்பிள்ளை என் சம்பளத்தைக் குறைத்துவிட்டானே!" என்று முதலாளியிடம் அவன் விண்ணப்பம் செய்து கொள் கிறான். அதுபோல இருக்கிறது இந்தப் பாட்டு. முருகப் பெருமானுடைய திருவருளால் வேலை செய்கிறவன் பிரமன். ஆதலால் அவனை மிகவும் கெட்டவன் என்று சொல் வதற்கு மனம் வரவில்லை. ஒருகால் என் மீதுதான் குற்றமோ?! என்று குறிப்பும் இந்தக் கேள்வியில் அடங்கியிருக்கிறது. தாடாளன் பிரமன் செய்த தீங்கை அருணகிரிநாதப் பெருமான் முரு கனிடத்தில் விண்ணட் த்ெதுக் கொள்ளும்போது அப்பெருமானை எப்படிச் சொல்லுகிறார் என்று சற்றே கவனிக்க வேண்டும்,. முருகன் குன்றெறிந்த தாடாளன். தாடாளன் என்பதற்குச் சிறப் பான முயற்சியை உடையவன் என்பது பொருள். கிரெளஞ்ச மலையை வேலாயுதத்தால் எறிந்த பெரு முயற்சி உடையவனே! தென்னாட்டில் உள்ள தணிகாசலத்தில் எழுந்தருளி இருக்கும் முருகனே! என்று விளிக்கிறார். குன்றெறிந்த தாடாளனே! தென்தணிகைக் குமர! "வீரம் நிறைந்த நின்னுடைய அடியான் நான். இந்த உலகத் தில் என்னைப் போன்றவர்கள் அருள் பெறுவதற்காகத் திரு 277