பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வுருவம் கொண்டு, தணிகையில் எழுந்தருளியிருக்கிறவன் 虏。 ஆகையால் உன்னிடம் இந்த விண்ணப்பத்தைச் செய்து கொள் கிறேன்' என்பது போலப் பாடுகிறார். வணங்காத் தலை முருகன் அருணகிரிநாதரைப் பார்த்து, "பிரமன் மேலே நீ குறைபட்டுக்கொள்வதற்கு என்ன காரணம்? அவன் என்ன செய்துவிட்டான்? என்று கேட்கிறான். அருணகிரியார் சொல் கிறார். 'எம்பெருமானே! அவன் எனக்குத் தலை அமைத்திருக் கிறானே. இதைக் கண்டு நான் மிக்க அறிவாளி என்று பலரும் நினைக்கிறார்கள். நான் இந்தத் தலையைச் சுமந்து கொண்டிருக் கிறேன். இருந்தும் என்ன பயன்? உன்னுடைய தண்டை அணிந்த திருவடியில் இந்தத் தலை விழுவது இல்லையே! இது தலை யாகுமா? இத்தகைய தலையை எனக்கு அந்தப் பிரமன் தந்திருக் கிறான்' என்கிறார். நின் தண்டைஅம் தாள் சூடாத சென்னியும். தண்டையந் தாள் என்கிறார். 'நான் மறந்தாலும் இந்தத் திருவடியை நீ தொழவேண்டுமென்று அந்த அடியில் ஒலிக்கின்ற தண்டை எனக்கு அறிவுறுத்துமே! அப்படி இருந்தும் என்னுடைய தலை வளைவது இல்லை. தாளைப் பணிவது இல்லை." நாடாத கண் 'உன்னுடைய திருவுருவத்தை எத்தனை விதமாக அலங்காரம் பண்ணுகிறார்கள் பெரியவர்கள் உன் திருக்கோயிலுக்கு வந்து, அந்தத் திருக்கோயிலில் நீ எழுந் தருளியிருக்கும் இடம் கண்டு, சிறந்த அலங்காரங்களைப் பெற்று மிளிரும் உன்னுடைய திரு வுருவ லாவண்யத்தைக் கண்ணால் கண்டு தரிசிக்க வேண்டாமா? திருவுருவத்தைக் கண்ட பிறகு உன் திருவடி எங்கே என்று தேடித் தண்டையை அணிந்த அந்தத் தாமரையைக் கண்டு ஆனந்தம் அடையவேண்டாமா? என்னுடைய கண் அப்படி இருக்க வில்லையே! நான் கோயிலுக்குச் செல்கிறேன். ஆனால் அங்கே என்னுடைய கண் எதை நாடுகிறது? உன்னுடைய திருவடியை அல்ல; ஆகாசத்தைப் பார்க்கிறது; விளக்கு வெளிச்சத்தைப் பார்க்கிறது; அங்கே வந்திருக்கிறவர்களைப் பார்க்கிறது. உன் 278