பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்த குற்றம் என்ன? னுடைய திருவடியைப் பார்த்து அதனால் வருகின்ற இன்பத்தை அடைவதற்குத் தெரியவில்லையே! அத்தகைய கண்ணை அல்லவா அந்தப் பிரமன் எனக்குக் கொடுத்திருக்கிறான்?' நின் தண்டைஅம் தாள் நாடாத கண்ணும் தொழாத கை 'அதுமட்டுமா? எனக்கு இரண்டு கைகளைக் கொடுத்திருக் கிறான். விரிக்கவும், குவிக்கவும் ஏற்ற வகையில் அவை இருக்கின்றன. பற்பல இடங்களில் சென்று ஆடியும் அசைந்தும் வேலை செய்கின்ற கைகள் உன்னுடைய சந்நிதானத்தில் வந்து குவிய வேண்டாமா? இந்தக் கைகள் வெவ்வேறு காரியங்களைச் செய்து செய்து ஏற்றுக்கொண்ட அழுக்கை எல்லாம் போக்கு வதற்கு உன் திருமுன்னர் நின்று தொழுவதுதான் சரியான வழி. அப்படி இருந்தும் என்னுடைய கைகள் உன்னைத் தொழுவது இல்லை. அத்தகைய கொடிய கைகளாக அல்லவா பிரமன் எனக்குப் படைத்திருக்கிறான்?" நின் தண்டைஅம்தாள் தொழாத கையும். கைகளைக் குவித்தல் நம்முடைய நாட்டில் கைகளைக் குவித்துக் கும்பிடுவது ஒரு வழக்கம். கோபுரத்தைக் கண்டாலும் கை குவியும். இறைவனுடைய நினைப்பை ஊட்டுகின்ற எந்தப் பொருளைக் கண்டாலும் கும்பிடுவது நமக்கு இயல்பு. நம்முடைய கைகள் தனித்தனியே இரண்டு வேறு பக்கங் களில் இருக்கின்றன. நடக்கும்போது வீசி நடக்கின்றன. கொடுக் கும்போது நீண்டு கொடுக்கின்றன. வாங்கும்போது நீண்டு வாங்கு கின்றன. அடிப்பது, அணைப்பது ஆகிய சமயங்களில் எல்லாம் கைகள் வேலை செய்கின்றன. இத்தனை இருந்தும் நல்ல பயன் உண்டாவது இல்லை. ஒரு வேலையும் செய்யாமல் இரண்டு கைகளும் குவித்துத் தொழுவதுதான் சிறந்த காரியம். சில கிழவர்களைப் பார்த்து அவர்களுடைய பிள்ளைகள், நீங்கள் க.சொ.w-19 279