பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 அப்படியே அவனுடைய நாவும் மற்ற உயிர்களுக்கு இல்லாத வகையில் அமைந்திருக்கிறது. விலங்கு முதலியன சில ஒலி களைத்தான் எழுப்பும். மனிதனே பேசும் ஆற்றலைப் பெற்றிருக் கிறான். அவனுடைய நாக்கு மிகச் சிறந்தது. ஆகவே இந்தப் பாட்டில் மனிதனுக்குச் சிறப்பைத் தந்த தலையையும், கண்களையும், கைகளையும், நாவையும் எடுத்துச் சொன்னார். மற்ற உயிர்க் கூட்டங்களைப் போல இல்லாமல் சிறப்பான உறுப்புக்களைப் பெற்ற மனிதன் அந்த உறுப்புக் களைக் கொண்டு மிகச் சிறந்த பயனைப் பெற வேண்டும். தலையினால் வணங்குவதற்கும், கண்ணால் காண்பதற்கும், கையால் தொழுவதற்கும், நாவினால் பாடுவதற்குமாக இறைவன் திருவுருவத்தோடு எழுந்தருளியிருக்கிறான். நம்முடைய கண் முன்னே திருத்தணி மலையுச்சியில் நின்று தன்னுடைய திருக் கோலக் காட்சியை வழங்குகிறான். அவனுடைய திருமேனி முழு வதையும் பார்த்துப் பயிலாவிட்டாலும் அவனுடைய திருவடி யிடத்தில் ஈடுபட்டுக் கீழே விழுந்து வணங்கலாம். அது மிகவும் முக்கியமானது. அவனுடைய திருமேனி உறுப்புக்கள் பலவற்றைக் கண்டு வணங்கினாலும் இறுதியில் அவனுடைய திருவடியை வணங்குவதுதான் தலையானது; பயனைத் தருவது. அதனால், அந்த அடியை வணங்காத தலையையும், அதனை நோக்காத கண்ணையும் அதனைத் தொழாத கையையும், அதனைப் பாடாத நாவையும் பிரமன் எனக்கென்றே படைத்தானே' என்று அருண கிரியார் முருகனிடத்தில் முறையிட்டுக் கொள்கிறார். கருத்து எதிர்மறை வாய்பாட்டில் இந்தப் பாட்டு இருந்தாலும் திருத் தணிகைக் குமரனுடைய தண்டையந்தாளைத் தலையினால் வணங்கி, கண்ணால் பார்த்து, கைகளினால் கும்பிட்டு, நாவி னால் பாடவேண்டுமென்பதையே கருத்தாகக் கொள்ள வேண்டும். 'நீ இப்படியெல்லாம் எனக்கு அமைத்தாயே என்று முருகனையே குறை கூறியிருக்கலாம். நேரே சொல்லாமல் ஒரு வகையில் போக்குக் காட்டிப் பிரமன் மேலே அந்தக் குற்றத்தைச் சுமத்தினார். இது ஒருவகைச் சாமர்த்தியம். இருந்தாலும் முருகப் 282