பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயக்கத்துக்கு முறிவு கிறவர்கள் அதனால் பெண் மயலை வளர்த்து அந்தப் போகத்தை அடைவதற்கே முயன்று கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். வெவ்வேறு வகையில் கலை என்றும், தொழில் என்றும், நாடகம் என்றும் சொல்லிப் பலர் காமத்தைப் பெருக்கி வருகிறார்கள். இப்படிக் காமம் வளர்ச்சி அடைவதை அருணகிரிநாதர் தம்முடைய காலத்திலேயே கண்டார். அதனால் அதைப் பற்றி அடிக்கடி பலவகையாகச் சொல்கிறார். பொதுமகளிர் செயல் மயலூட்டும் பொதுமகளிர் தம்மை அலங்கரித்துக் கொண்டு ஆடவர்களைத் தம் மயலில் சிக்க வைக்கிறார்கள். இந்தப் பொது மகளிருடைய அழகையும், அவர்களது வஞ்சகச் செயல்களையும் திருப்புகழில் அருணகிரிநாதர் பற்பல விதமாக வருணித்திருக் கிறார். அவரது சொந்த அநுபவம் அது என்று சொல்லக் கூடாது. இதனை நான் பலமுறையும் சொல்லியிருக்கிறேன். டாக்டரும் நோயாளியும் ஒரு டாக்டர் பல நோயாளிகளுக்கு மருந்து கொடுத்தும், அறுவை வைத்தியம் செய்தும் நோயைத் தீர்க்கிறார். அவர் தமக்கு என்று ஒரு மாளிகையை அமைத்துக் கொண்டிருக்கிறார். நோயாளிகளுக்கு என்று பெரிய ஆஸ்பத்திரி ஒன்றும் கட்டி யிருக்கிறார். பலவகையான நோயாளிகள் அந்த ஆஸ்பத்திரியில் வந்து தங்கியிருக்கிறார்கள். அவர் தம்முடைய நேரத்தில் பெரும் பான்மையும் ஆஸ்பத்திரியில்தான் செலவிடுகிறார். ஆஸ்பத்திரி யில் இருப்பவர்கள் நோயாளிகள் என்று நமக்குத் தெரியும். ஆனால் நோயாளிகளுக்கு நலம் செய்வதற்காக டாக்டரும் அங்கே இருப்பார். மாளிகையில் அங்கே உள்ள வசதிகளை அநுபவித்துச் செல்வரைப் போல வாழ்பவரும் அவரே. மாளிகையில் இருக்கும் போது அவர் கையில் அழுக்கு இராது. மேலே ரப்பர் குழாய் இராது. உல்லாசமாக உணவு உண்டு வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்பார். அப்போது யாரோ பெரிய கனவான் என்று அவர் தோற்றுவார். ஆனால் அவர் நோயாளிகளுக்கிடையே இருந்து அவர்களுடைய புண்களைக் கழுவுவதிலும், நோய்க்கு மருந்து கொடுப்பதிலும் 285