பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 அப்போது தாம் அடையவேண்டுமென்று ஆசைப்பட்ட இன்பத்தைப் பெறாமல் இருப்பது ஒன்று. இது நல்லது, இது தீயது என்று எண்ணுகிற அறிவு குழம்பிப் போவது ஒன்று. இந்த இரண்டும் அல்லலை மேலும் உண்டாக்குகின்றன. நிறைவற்ற தன்மையும், குழப்பமும் சேர்ந்து மயக்கத்தை உண்டாக்கு கின்றன. நம்முடைய செயலைக் கண்டு உலகத்தார் இழிப்பார் களே என்பதை எண்ணாமல், நம்முடைய வாழ்நாளில் நாம் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதையும் சீர்துக்கிப் பாராமல் பித்துப் பிடித்தவர்களைங் போல மயங்கி நிற்கிறார்கள். 'என் நெஞ்சமே, நீ இப்படி மயங்காதே' என்று உபதேசம் செய்ய வருகிறார் அருணகிரியார். மயக்கம் போக்க வழி இந்த மயக்கத்தைப் போக்குவதற்கு வழி என்ன? சேல் வாங்கு கண்ணை உடைய உருவத்தைக் கண்டு, அதிலிருந்து தொடங்கிய இந்தத் திருவிளையாடல் நிற்க வேண்டுமென்றால் அதற்கு முறிவாக வேறு ஒன்றைக் காணவேண்டும். கண்டு கருத வேண்டும். அந்தப் புரிகாரத்தைச் சொல்ல வருகிறார். 'முருகப் பெருமானுடைய திருவடியைப் பார்த்துத் தியானம் செய்" என்பது அவர் சொல்லும் பரிகாரம். பூங்கழல் நோக்கு நெஞ்சே. தாமரை போன்ற, அழகுடைய கழலை அணிந்த முருகப் பெருமானுடைய பாதத்தைத் தியானம் பண்ணு நெஞ்சமே என்ற உபதேசிக்கிறார். நோக்கு என்பது இங்கே தியானம் பண்ணு என்று பொருளை உடையது. முருகப் பெருமானைப்பற்றிப் பின் அடிகளில் சொல்கிறார். முருகப் பெருமான் இந்திரனுக்கு உபகாரம் செய்தவன். இந்திரன் நிலை இந்திரபோகம் என்று சொல்வார்கள். உலகத்தில் உள்ளவர் களுடைய பெரும் போகங்கள் எல்லாம் இந்திர போகத்திற்கு ஈடாகா. இந்திரன் தேவர்களுக்குத் தலைவன். புண்ணியத்தின் பயனாக இன்பத்தை அநுபவிக்கின்றவன். பொதுவாகத் தேவர் களே அந்த இயல்பு உடையவர்கள். அவர்களுக்குத் தலைவன் 29C,