பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 கும் அறுபத்தாறு கோடி அசுரர்களுக்கும் தலைவனாக இருந்தான். இந்திரனோ தேவலோகத்திற்கு மாத்திரம் தலைவன்; முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு மட்டும் அரசன். தேவர்களைப் போல இரட்டிப்பு மடங்கினர் அசுரர்கள். இந்திராணியின் நிலை அந்த அசுரர்களுக்குத் தலைவனாகிய சூரன் அமராவதிப் பட்டணத்தின் மேல் படையெடுத்து இந்திரனை அந்த நகரத்தி லிருந்தே ஒட்டி, அவனுடைய மகனைச் சிறையில் அடைத்தான். இந்திரன் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்தான். அவன் மனைவி இந்திராணி யாரும் அறியாமல் மேரு மலையில் மறைந்திருந்தாள். எந்தச் சமயத்தில் இந்திரன் உயிர்விடுவானோ என்று அவள் கழுத்தில் கட்டியிருந்த கயிறு ஊசலாடிக் கொண் டிருந்தது. இந்திரன் வச்சிராயுதத்தைக் கையில் வைத்திருந்தாலும் சூரனுக்கு முன்னால் அந்தப் பெரும்படை பயன் அற்று ஒழிந் தது. இந்திரன் பிழைத்தால்தான் இந்திராணியினுடைய மங்கல வாழ்வு நிலைத்து நிற்கும்; அவள் கழுத்தில் நூல் நிற்கும். இந்திரன் எத்தனையோ படைக்கலத்தைக் கொண்டிருந்தாலும், பேராற்றல் உடையவனாக இருந்தாலும், அமுதத்தை விருந்தாக நுகர்ந்திருந்தாலும் தனக்கு வந்த நாசத்தைப் போக்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லாதவன் ஆகிவிட்டான். இந்திராணியின் திருமாங்கல்ய நூல் என்றைக்கு அறுமோ என்று தொங்கிக் கொண்டிருந்தது. அந்த மாங்கல்ய நூலைப் காப்பாற்றுவதற்கு இந்திரனுக்கு ஆற்றல் இல்லை; அவனது வச்சிரப் படைக்கும் ஆற்றல் இல்லாமல் போய்விட்டது. தாலி காத்த பெருமான் ஆனால் அந்த மாங்கல்ய நூலை இரும்பு நூலாக ஆக்கி அது அவள் கழுத்தில் இருந்து கழியாத வண்ணம், சூரன் அந்த நூலை வாங்காத வண்ணம், பாதுகாத்தவன் முருகப் பெருமான். சூர பன்மனை அழித்து, இந்திரன் வாழ்வு பெறும்படி செய்து, இந்திராணிக்கும் மாங்கல்யக் கயிறு நிற்கும்படி செய்தான். அவன் தன் திருக்கையில் உள்ள வேலாயுதத்தை வாங்கிக் சூரன் மேலே விட்டான். அவன் வேலை வாங்கியிராவிட்டால் இந்திராணி அமங்கலியாகியிருப்பாள்; அவள் தன் கழுத்தில் 292