பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர் கொண்டு போவர்? அருணகிரியார் தம் நெஞ்சைப் பார்த்துச் சொல்கிற வகை யில் அமைந்த பாட்டு ஒன்றை முன்பு பார்த்தோம். குற்றம் செய் வாரைப் பார்த்து, 'நீ குற்றம் செய்கிறாயே! என்று சொன்னால் அவருக்குக் கோபம் வரும். அதனால் தம் நெஞ்சைப் பார்த்துச் சொல்வது போலச் சொல்லும் பாடல்களை அருண கிரியார் வாக்கில் பார்க்கலாம். ஆனாலும் அவருக்குக் கருணை மிகுதி யாகிவிட்டால் நேரே மக்களைப் பார்த்துச் சொல்லும் வகை யிலும் பாடுவார். அப்படிப் பாடிய ஒரு பாடலையே இப்போது பார்க்கப் போகிறோம். - . தாயின் கேள்வி தன் முரட்டுக் குழந்தை தான் சொல்வதைக் கேட்காமல் இருக்கிறான் என்று தாய் வருந்துகிறான். 'என் தலையெழுத்து' என்று குறிப்பாகச் சொல்கிறாள். அயலான் வந்தால் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஆனாலும் அந்தக் குழந்தை வீணாகப் போகிறதே என்ற வருத்தம் அதிகமானால், அடே. இப்படிச் சொன்ன பேச்சுக் கேட்காமல் ஒடுகிறாயே, நீ முன்னுக்கு வரவேண்டாமா?’ என்று பதைப்புடன் கேட்பதும் உண்டு. அது போல அருணகிரியார் இப்போது நம்மைக் கேட்கிறார். செல்வரின் கதை ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு சிறிய கிராமத்தில் ஒருவர் பிறந்தார். மிகவும் முயற்சி செய்து முன்னுக்கு வந்தார். தாமே முன்னுக்கு வந்தவர்' (Self - made man) என்று சிலபேரை உலகத்தார் சொல்வது வழக்கம். அந்த வகையைச் சேர்ந்தவர் அவர். செல்வம் நிரம்பிய குடும்பத்தில் அவர் பிறக்கவில்லை. ஆனால் அவருக்கு முயற்சி என்ற செல்வம் இருந்தது. அந்தச் சிற்றுாரில் கல்வி கற்று முடித்துக் கொண்டு பேரூருக்கு வந்தார். க.சொ.V-20