பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர் கொண்டு போவர்? மனையாட்டி வாய்த்தாள். அப்புறம் குழந்தை குட்டி, பேரன், பேத்தி என்று சுற்றம் பெருகிற்று. ஊர் முழுவதும் நண்பர் களானார்கள். பத்து ஏக்கரா நிலம், ஐந்து வீடுகள், பாங்கில் பணம் ஆகிய எல்லாம் சேர்ந்தன. மனையாட்டியின் கழுத்தில் நிறைய நகைகள் இருந்தன. அவரும் காதில் கடுக்கன், கையில் மோதிரம் முதலியன அணிந்து கொண்டிருந்தார். வாழ்க்கையில் குறை இத்தகைய வாழ்க்கையைத்தான் உலகத்தார் சிறந்த வாழ்க்கை என்று சொல்கிறார்கள். இப்படி வாழ முடிந்தால் இதைக் காட்டிலும் சிறந்த பதவி வேறே இல்லை என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆகவே எல்லா வகையிலும் வளம் பெற்ற அந்த மனிதரை உலகம் போற்றியது. நிலமும், பொருளும், உறவினர்களும், நண்பர்களும் அவருக்கு இருந்தன எனினும் அவருக்குக் குறை இல்லையென்று சொல்லலாமா? அவருடைய உள்ளத்தில் அமைதி இருந்ததா? இல்லை. காரணம் என்ன? ஈட்டிய பொருள் எப்போதும் நிற்பது இல்லை. அணிகளும், ஆடைகளும் எப்போதும் விளக்கமாக இருக்கும் என்பதும் இல்லை. உறவினர்கள் எப்போதும் நம்மோடு இருந்து வாழ் வார்கள் என்று சொல்வதற்கும் இல்லை. அதிகமான குழந்தைகள் பிறந்தால் அவை நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டுமே என்ற அச்சம் பெற்றவர்களுடைய உள்ளத்தில் இருக்கிறது. வியாபாரம் செய்தால், 'பொருள் நஷ்டம் அடையாமல் இருக்க வேண்டுமே என்ற அச்சம் வியாபாரிக்கு இருக்கிறது. வீட்டைக் கட்டிக்கொண்டால் அது அழுக்குப்படாமல் இடியாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வீட்டுக்காரனுக்கு இருக்கிறது. பணம் வைத்திருந்தால் திருடரும், கடன் வாங்குவாரும், வரி தண்டு வாரும் அந்தப் பொருளைக் கொண்டுபோய் விடுவார்களே என்ற அச்சம் இருக்கிறது. பொருளும், உறவினர்களும், நண்பர்களும் நம்மை விட்டுப் போய்விடும் காலம் வருமோ என்ற கவலை யினால் அமைதியை இழந்துவிடும் இயல்பு மனிதர்களுக்கு இருக்கிறது. ஒருகால் அவையாவும் தம்மை விட்டுச் செல்லாமல் இருந்தாலும் அந்தச் செல்வர் அவைகளை விட்டுப் போகின்ற காலம் ஒன்று உண்டு. யமன் வந்து உயிரைக் கொண்டுபோகும் 297