பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 போது ஒருவன் ஈட்டி வைத்திருக்கும் செல்வமோ, உடம்பில் அணிந்திருக்கும் அணிகளோ, அன்பு செய்து பாராட்டும் மனைவியோ, உறவினர்களோ, நண்பர்களோ அவனுடன் செல்ல இயலாது. அவன் தன்னுடையது என்று எண்ணி, பல சமயங் களில் தானே அது என்று ஏமாந்து வாழ்ந்திருந்த உடல்கூடச் செல்லாமல் பிணமாகப் போய்விடும். ஒரு மனிதன் இறந்தால் அவனுடைய உறவினர்கள் மயானத்தோடு நின்றுவிடுகிறார்கள். மனையாட்டி வீட்டோடு நின்றுவிடுகிறாள். அசையாப் பொருள் அசைவதே கிடையாது. இறந்த பிறகு செல்வன் ஒருவன் இறந்துவிட்டால் அவன் சம்பாதித்து வைத்திருந்த பொருள்களை எனக்கு உனக்கு என்று சண்டை யிட்டுப் பெற்றுக் கொள்வதற்குப் பலர் காத்திருப்பார்கள். பல குடும்பங்களில் பொருளை ஈட்டி வைத்த செல்வன் இறந்த பிறகு அந்தச் சொத்துக்காகப் பலவகையான சச்சரவுகள் உணடாகிப் பலகாலம் வழக்குகள் நடந்து வருவதை நாம் பார்க்கிறோம். எத்தனைக்கு எத்தனை செல்வன் சிறப்பாக வாழ்ந்தானோ அத் தனைக்கு அத்தனை அவனுக்குப் பின் அவன் குடும்பம் உலகம் பழிக்கும் படியான நிலைமையை அடைகிறது. 'அத்தனை சம்பாதித்தான் ஐயா! என்ன பிரயோசனம்? அத்தனையும் ஒரு தலைமுறைக்குக்கூட நிற்காமல் போய்விட்டதே' என்று ஊரார் பேசுவதை நாம் கேட்கிறோம். ஆகவே, மனிதன் ஈட்டுகின்ற பொருள் அத்தனையும் அவன் உயிருள்ள வரைக்கும் பயன்படும் என்று சொல்லலாம். உயிர் பிரிந்த பிறகு அவற்றால் அவனுக்கு எவ்விதப் பயனும் இராது. இறைவன் ஆணை மூன்று பேர்கள் இருந்தார்கள். அம்மூவரும் சிறிதுசிறிது பணத்தை முதலாக வைத்துத் தொழில் நடத்தத் தொடங் கினார்கள். ஒருவன் தான் வைத்த முதலை இழந்து விட்டான். ஒருவனுக்கு முதலில் ஒரே நஷ்டமாக வந்தது; ஆனால் விடாமல் தொழிலை நடத்தினமையினால் கடைசியில் இழந்ததையும் சேர்த்துச் சம்பாதித்தான். மூன்றாமவனுக்கு முதல் பெருகிக் 298