பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர் கொண்டு போவர்? கொண்டே போயிற்று; ஆனால் கடைசியில் எல்லாவற்றையும் இழந்து விட்டான். இப்படிப் பல வகையில் தொழில் செய்பவர்களின் நிலை ருப்பதைப் பார்க்கிறோம். பணமும், முயற்சியும் இவர்களிடத் தில் ஒரே மாதிரி இருந்தாலும் முடிவும் ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. நம் சக்தியினாலே இந்த விளைவு நேருவதாக இருந்தால் எல்லோருக்கும் ஒரே மாதிரி பயன் உண்டாகும். அப்படியின்றி அவரவர்களுடைய வினைகளுக்கு ஏற்ப ஒரு சக்தி நம்மையெல்லாம் இயக்குகிறது. அந்தச் சக்தி யினாலேயே இப்படியெல்லாம் ஏற்படுகிறது. அதனால் இந்த வேறுபாட்டை உலகத்தில் பார்க்கிறோம். ஆகவே ஒருவனுக்குச் செல்வம் சேருவதும், உறவினர்கள் சேருவதும், நண்பர்கள் சேரு வதும் தன்னுடைய சொந்த முயற்சியினால் அன்று என்று எண்ணி, எல்லாம் ஆண்டவனுடைய ஆணை என்கிற நினைப்பு இருந் தால், அவற்றைப் பெறுவதனாலே தனி இன்பமும் இழப்பதனாலே பெருந்துன்பமும் உண்டாகா. எப்படி என்பதைப் பார்க்கலாம். பற்று அற்ற நிலை செய்கின்ற காரியத்தின் விளைவு இறைவனுடைய திருவரு ளின்படி அமையும் என்ற நினைப்பு இருந்தால் நிச்சயமாக லாபம் வருமென்று எதிர்பார்க்கமாட்டான். ஈட்டுகின்ற பொருளில் பற்று இராது. லாபம் வந்தாலும், நம்முடையது அல்ல; இறைவன் திருவருள் என்று எண்ணி இருப்பான். இதனால் மிகுதியான லாபம் வந்தால் அது காரணமாக அகம்பாவமோ, செருக்கோ உண்டாகாது. நஷ்டம் வந்தாலும், ஐயோ போய்விட்டதே என்ற துக்கம் உண்டாகாது. ஒரு பொருளில் பற்று வைத்தால் அந்தப் பொருள் போகும்போது துன்பம் உண்டாவது இயல்பு; அல்லது அந்தப் பொருளை வேறு ஒருவன் கைப்பற்றினால் அவனிடத் தில் பகை உண்டாகும். பொருளிடத்தில் பற்றுக் குறைவாக இருந்தால் பகையோ துன்பமோ குறைந்து விடும். 'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்' என்பது திருக்குறள். பற்று இல்லாமல் இருக்கவேண்டுமானால் இறைவனுடைய நினைப்பு வரவேண்டும். முன்னாலே சொன்ன 299