பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 செல்வர் தம்முடைய முயற்சியினால் பலவகைப் பொருள்களை ஈட்டியும் அவர் இறந்துபட்டார். அவை அவருடன் போகா என்ற உண்மையைத் தெரிந்து கொண்டோம். . இந்த உண்மையை அவரும் வாழும்போதே தெரிந்து கொண். டிருக்கலாம். இதைத் தெரிந்து கொண்டதன்ால் அவருக்கு உண் டாவது துக்கந்தான். அதற்கு மேலே மற்றோர் உண்மையைத் தெரிந்து கொண்டிருந்தால் அவருக்குத் துக்கம் வராமல் இருந் திருக்கும். பொருள்கள் எல்லாம் நம்மை விட்டுப் போகும்; நாமும் அவற்றைவிட்டுப் போவோம்' என்ற உண்மையைத் தெரிந்து கொள்வதோ? பொருள்கள் நம்மிடம் சேருவதும், நழுவுவதும் ஆண்டவன் திருவருளால்தான் நிகழ்வன. ஆகையால் அவற்றில் பற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும்' என்ற உண்மையையும் சேர்த்து நினைக்கக் கற்றுக் கொண்டிருந்தார் என்றால் பொருள் அவரை விட்டுப் போனாலும், அவர் அவற்றை விட்டுப் போகும் நிலை வந்தாலும் துன்பம் உண்டாகர்து. மூன்று வகை மனிதன் சேர்த்துக் கொள்கிற பொருள்களை மூன்று வகை யாகப் பிரிக்கலாம். உறவினர்கள், நண்பர்கள் ஆகியவர்கள் ஒரு வகை. அசையாப் பொருள் ஒருவகை. அசையும் பொருள் ஒரு வகை. இந்த மூன்று வகைப் பொருள்களையும் நிரம்ப உடைய வர்கள் மிகப் பெரியவர்கள். இந்த மூன்றும் ஒருவனிடத்தில் சேருவதும் மிக அருமை. மனிதன் இந்த மூவகையும் தனக்குச் சேரவேண்டுமென்று எண்ணி முயற்சி செய்துகொண்டிருக்கிறான். இவை ஒருவனைச் சாருவதும், தீர்வதும் அவன் முயற்சியின் பாற்பட்டவை அல்ல. இந்த உடம்பு போனவுடன் நிச்சயமாக அவற்றினுடைய தொடர்பு அற்றேவிடும். இந்த உண்மையை அருணகிரியார் சொல்ல வருகிறார். உறவினர்களுக்கெல்லாம் முதல் ஆரம்பம் மனைவி. மனைவி வந்த பிறகுதான் நம்முடைய குடும்பம் உண்டாகிறது. தாய் தகப்பனோடு இருக்கும்போது அது நம்முடைய குடும்பம் அன்று; தகப்பனின் குடும்பத்தில் நாம் இருக்கிறோம். நாம் நம் முயற்சி யினால் எதையும் செய்வதற்குரிய வகை மனையாட்டியோடு நாம் குடும்பம் நடத்துகிறபோதுதான் அமைகிறது. மனைவி வந்த ՅԾC)