பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 பிறப்புக்குக் காரணம். இந்த ஆசை மாயையினால் உண்டாகிறது. ஆசையை மூன்று வகையாகப் பிரிப்பார்கள். பெண்ணாகை பொன்னாசை, மண்ணாசை என்று. இதையே, “அகம்மாடை மடந்தையர்' என்று கந்தர் அநுபூதியில் சொல்கிறார். அகம் - வீடு. இது மண் னாசைக்குப் பிரதிநிதி. மாடை - பொன். மடந்தையர் - பெண். “அகம்மாடை மடந்தையர் என்று அயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே" என்று கந்தர் அநுபூதியில் வருகிறது. மகமாயையைக் களைகின்ற பேராற்றல் படைத்த முருகப் பெருமானது திருவருள் பெற்றும், பிரபஞ்ச மாயையினின்றும் நான் விடுபடவில்லையே' என்று கந்தர் அநுபூதிப் பாடலில் அவர் சொல்கிறார். “மகமாயை களைந்திட வல்லபிரான் முகமாறும் மொழிந்தும் ஒழிந்திலனே அகம்மாடை மடந்தையர் என்றயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே." இந்தப் பாட்டில், 'அகம் மாடை மடந்தையர் என்று சொல் வதையே இப்போது பார்க்கப் போகிற கந்தர் அலங்காரப் பாட்டில், தார்கொண்ட மாதரும் மாளிகையும் பணச்சாளிகையும் என்று சொல்கிறார். கூர்கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றங்கொண் டாடுவிர்காள் போர்கொண்ட காலன் உமைக்கொண்டு போம்அன்று பூண்பனவும் தார்கொண்ட மாதரும் மாளிகை யும்பணச் சாளிகையும் ஆர்கொண்டு போவர்ஜ யோ?கெடு வீர்! நும் அறிவின்மையே! இறத்தல் உறுதி உலகத்தில் பலபல பொருள்கள் அநுபவிப்பதற்கு இருந்தும் அவற்றை அநுபவிக்காமல், அநுபவிக்க முடியாமல், ஒருவன் 302