பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 போதும் நிலையான பொருளிடத்தில் பற்று வைக்க வேண்டும். மயக்கத்தினால் மனைவியினாலும், மற்றப் பொருள்களினாலும் இன்பம் வரும் என்று நினைத்து அவற்றோடு தொடர்பு ஏற் படுத்திக் கொள்கிறோம். அந்தப் பொருள்கள் நிலைத்தன அல்ல. ஆதலின் அவற்றால் வரும் இன்பமும் எந்தச் சமயத்திலும் நின்று விடும். அப்படியின்றி நாம் பெறுகின்ற இன்பம் நிலைத்திருக்க வேண்டுமானால் என்றைக்கும் நிலையான பொருளோடு தொடர்பு இருக்க வேண்டும். என்றைக்கும் நிலையான பொருள் இறைவன் தான். மனிதர்களாகப் பிறந்தவர்கள் இன்பமாக வாழ வேண்டு மானால் அன்பு செய்ய வேண்டும். அன்புடைய வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை. "மனைவியிடத்தில் அன்பு வைக்கிறேன். குழந்தையிடத்தில் அன்பு வைக்கிறேன். ஐயோ, இவர்கள் கொடுக்கிற துன்பம் பொறுக்க முடியவில்லையே! இவர் களிடத்தில் நான் வைத்த அன்பு பெரும் தொல்லையாகப் போய் விட்டதே' என்று வருந்துகிறான். குழந்தை இறந்துவிட்டாலோ, மனைவி இறந்துவிட்டாலோ, அவன் அடைகிற துன்பத்திற்கு எல்லை இல்லை. இப்படி நாம் அன்பு வைக்கிற பொருள்கள் நிலையாத பொருள்களாக இருந்தால் அந்த அன்பினால் பயன் இல்லை. அந்த அன்பைப் பற்று என்று சொல்வர். எல்லாக் காலத்தும் இருக்கிற நிலையான பொருளிடத்தில் வைக்கும் அன்பே உண்மையான அன்பு. நம்முடைய உடம்பு பல காலம் இராது என்பதைப் புதிதாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. நிலையான பொருள் எங்கே இருக்கிறது என்பதைத்தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அந்த ஆராய்ச்சியையும் நாம் புதிதாகச் செய்வதுகூட அவசியம் இல்லை. பல பெரியவர்கள் இந்த வாழ்க்கையில் பல வகையான பரிசோதனைகளைச் செய்து உண்மை இன்னது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். நிலையான இன்பம் இத்தகையது, அது இன்ன இடத்திலிருந்து வருவது, இன்னவாறு பெற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்; பிறர் வாயிலாகக் கேட்கவும் கேட்கிறோம். ஆனாலும் அவற்றில் நமக்கு நம்பிக்கை இருப்பது இல்லை. 3O4.