பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 என்று சொன்னார். அவன் பாசம் ஒருநாள் நிச்சயமாகக் கழுத்தைச் சுற்றி விழுந்துவிடும். "நீங்கள் உம்முடைய உடம்பு, மாளிகை முதலியன எல்லாம் நிலையானவை என்று எண்ணிக் கொண்டு ஏற்றம் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்களே. உமது மாளிகையில் இருந்து மட்டும் அல்ல, உம்முடைய உடம்பிலிருந்தே உம் முடைய உயிரை அவன் பிரித்துக் கொண்டு போவான். அப்படிக் கொண்டு போகும்போது உம்முடைய இத்தனை பொருள்களும் உம்மோடு வருமா?" என்று கேட்கிறார். ஆர் கொண்டு போவர்? நிச்சயமாக வாரா. அவற்றை யார் கொண்டு போவார்கள்? அதுவும் நிச்சயம் இல்லை. பல பேர் தம்முடைய மக்களுக்குச் சொத்தை எழுதி வைப்பார்கள். சிரமப்படாமல் பெற்றது ஆகையால் அவர்கள் அந்தச் சொத்தைச் சூதாட்டத்திலும், வேறு தீய நெறிகளிலும் செலவிட்டுவிடுவார்கள். பலகாலம் உழைத்துச் சம்பாதித்த அந்தச் சொத்து மிகக் குறுகிய காலத்திலே கள்வர்கள், வழக்கு அறிஞர்கள், குதாடிகள் ஆகியோர்களுக்குரிய சொத்தாகப் போய்விடுகிறது. அதனால், ஆர்கொண்டு போவர் ஐயோ? என்று கேட்கிறார். கட்டி வைத்திருக்கும் வீட்டில் ஒருவன் பல காலம் வாழ்கிறான். ஆனால் அவன் இறந்தவுடன் அவன் பிள்ளை அதை விற்றுவிடுகிறான். அந்த வீட்டின் அமைப்பு அவனுக்குப் பிடிக்கிறது இல்லை; அல்லது வீட்டை விற்க வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்படுகிறது. அதைக் கட்டினவன் நல்ல சைவனாக இருப்பான். அவனுக்குப் பின்னால் அதுவே கசாப்புக் கடையாகக்கூட மாறிவிடுகிறது. இந்த மாதிரி சொத்தைச் சேர்த்த வனுடைய இயல்புக்கு விரோதமானவர்களிடம்கூட அவை போய்ச் சேருவதைப் பலவிடங்களில் பார்க்கிறோம். 'நான் இறந்த பிற்பாடு இவற்றையெல்லாம் நிச்சயமாக என்னுடைய பிள்ளை அநுபவிப்பான்' என்று யாரும் நம்புவதற்கில்லை. அதற்குக் காரணம் பிள்ளை பொல்லாதவன் என்பது மாத்திரம் அன்று. அந்தப் பிள்ளையே இவனுக்கு முன்னால் இறந்துவிட லாம். நிலையாமையே தன்னுடைய பெருமையாக உள்ள இவ் வுலகத்தில் இன்ன பொருள் இன்னாரிடம் இவ்வளவு காலம் 3O8