பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர் கொண்டு போவர்? கெடுவீர்! நும் அறிவின்மையே! என்று சொல்கிறார். ஆண்டவன் நமக்கு அறிவு கொடுத்திருக் கிறான். அதனைக் கூர்மையாக்கிக் கொண்டு அதனாலே உலக இயல்பை நன்கு அறிந்து வாழ வேண்டும். எது நிற்கும், எது நிலையாதது என்கிற உண்மையைத் தெரிந்து, கூர்மையான ஞான வேலைத் திருக்கரத்திற்கொண்ட பெருமானே உண்மையான பொருள் என்று அறிந்து அவனைப் போற்ற வேண்டும். ஆனால் அறிவு படைத்த மனிதன் ஆசையை வளர்த்துக் கொண்டே போவதனால் தன்னிடம் இருக்கிற சிறிது அறிவையும் வரவர மங்க அடித்துவிடுகிறான். மாயை கப்பிக் கொள்கிறது. அறி வின்மையினால், அஞ்ஞானத்தினால் உண்மையை உணர முடியாத வனாகி விடுகிறான். ஆகவே, பூண்பனவும் தார் கொண்ட மாதரும் மாளிகையும் பணச்சாளிகையும் நமக்கே உரியன" என்று எண்ணி வாழ்கிறான். 'இப்படி வாழ்கிறீர்களே, என்னே உங்கள் அறிவின்மை' என்று இடித்துக் காட்டி இரங்குகிறார் அருணகிரியார். கூர்கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றங்கொண் டாடுவிர்காள், போர்கொண்ட காலன் உமைக்கொண்டு போம்.அன்று பூண்பனவும் தார்கொண்ட மாதரும் மாளிகை யும்பணச் சாளிகையும் ஆர்கொண்டு போவர்ஐ யோகெடு வீர்தும் அறிவின்மையே! (கூர்மையையுடைய வேலாயுதனை வழிபடாமல், நமக்கு ஏற்றம் இருக்கிறதென்று தம்மைத் தாமே பாராட்டிக் கொள்ளும் மக்களே, போர்க்கோலத்தைக் கொண்ட யமன் உம்மை உடலினின்றும் பிரித்துக் கொண்டு போகும் அந்த நாளில், நீங்கள் அணியும் ஆடையாபரணங் களையும், மாலையை அணிந்த மனைவியரையும், மாளிகையையும், பணப்பையையும் ஆர்கொண்டு போவார்கள்? ஐயோ! கெட்டுபபோகிற வர்களே, உம் அறிவின்மை இருந்தவாறு என்னே! கூர் - கூர்மை. போர் - போர்க்கோலம்; ஆகுபெயர். தார் - மாலை; தார் கொண்ட மாதர் - உம்முடைய மார்பின் மாலையை ஏற்று மணந்து கொண்ட மாதர். சாளிகை - பை. அறிவின்மையே என்பது அறிவின்மை இருந்தவாறு என்னே என்றவாறு.) இது கந்தர் அலங்காரத்தின் எழுபத்தெட்டாவது பாட்டு. க.சொ.V-21 31.1