பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தாகுலம் தீர விசிறி எறிந்து ஆடுவதும், கீழே தட்டி ஆடுவதும் அவர்களது விளையாட்டு வகைகளில் சிறந்தவை. "பந்தாடி அங்கம் நொந்தார் பரிந்து" என்று திருப்புகழில் அருணகிரிநாதர் பாடுவார். பெருங்கதை என்னும் சிறந்த காவியத்தில் ஒர் அத்தியாயம் முழுவதும் இரண்டு பெண்கள் பந்தடித்து ஆடியதைச் சொல்கிறது. கம்பராமாயணத்தில் மங்கையர்கள் பந்தாடும் எழிலைப் பலவிடங்களில் கம்பர் சொல்கிறார். ஓரிடத்தை மாத்திரம் இங்கே நினைப்பூட்ட விரும்புகிறேன். கோசல நாட்டில் மங்கையரும் ஆடவர்களும் விளையாடுகிறார்கள். பூம்பொழில் களில் தங்கள் தங்களுக்கேற்றபடி அவர்கள் பொழுதைப் போக்குகிறார்கள். மங்கையர்கள் சந்தன மரம் அடர்ந்த சோலையில் பந்து விளை யாடுகிறார்கள். ஆடவர்களோ நந்தன வனங்களில் கலைகளைப் பயில்கிறார்கள். இயற்கையாகச் சந்தனவனமாகவும், நந்தன வனமாகவும் இருந்த அந்தப் பூம்பொழில்கள் தங்களிடம் வந்து பயிலும் மகளிராலும், ஆடவராலும் மணம் மாறி வேறு பொழில் களைப் போலத் தோன்றுகின்றனவாம். நல்ல மகளிருடைய மேனி சண்பக மணமுடையதாக இருக்கும் என்று சாமுத்திரிகா லட்சணம் கூறுகிறது. மங்கையர்கள் பந்தை அடித்து ஆடுகின்ற இடத்தில் அவர்கள் மேனி மணம் எங்கும் பரவிச் சந்தன மணத்தையே மாற்றி விடுகிறது. அது சண்பக வனமோ என்று ஐயப்படும்படியாக அமைகிறதாம். அதுபோல் ஆடவர்கள் கலை பயில்கின்ற நந்தனவனங்களும் தம்முடைய இயற்கை மாறிக் காண்கின்றன. சிறந்த ஆடவர்களுடைய திருமேனியில் முல்லை மணம் வீசும் என்பது ஒரு மரபு. கலை பயில் கழகங்கள் இருந்த நந்தன வனத்தில் ஆடவர்களுடைய திருமேனியிலுள்ள முல்லை மணம் படர்ந்து நந்தன வனங்களை எல்லாம் முல்லைக் காடு போலத் தோற்றச் செய்கிறது. இந்தக் கருத்தைக் கம்பர் வைத்துப் பாடுகிறார். "பந்தினை இளையவர் பயில்இடம், மயில் ஊர் கந்தனை அனையவர் கலைதெரி கழகம், சந்தன வனம்.அல, சண்பக வனம்ஆம்; நந்தன வனம்.அல, நறைவிரி புறவம்.” 3:13