பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 'பந்தினை இளையவர் பயில் இடம், சந்தன வனம் அல சண்பக வனம் ஆம்” என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும் இந்தக் காட்சியில் சண்பக மணம் பெற்ற உடம்பையுடைய பெண்கள் சந்தன மரக்காட்டில் பந்து விளையாடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். - இந்தக் காலத்தில் பெரும்பாலும் ஆடவர்களே பந்தாடுகிறா கள். ஆண்களுக்குரிய செயல்களைப் பெண்களும், பெண்களுக் குரிய செயல்களை ஆண்களும் செய்கிற காலம் இது. முறை மாறிச் செய்கின்ற பல செயல்களை இந்தக் காலத்தில் பார்க் கிறோம். இந்த முறை மாற்றத்தால் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு. பந்தும் கண்ணும் மங்கையர்கள் பந்தை ஆடும்போது அவர்களுடைய கண்கள் அந்தப் பந்தோடு செல்லும். இயற்கையாகவே பிறழுகின்ற அவர்களுடைய கண்கள் பந்தை விளையாடும் போது பின்னும் அதிகமாகப் பிறழும். தண்ணிரில் மேலும் கீழும் உலாவுகின்ற மீனைப் போலப் புரண்டுகொண்டிருக்கும். காளையின் பார்வை ஒரு பெண் பந்தாடிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கயல் மீன் போன்ற கண்கள் புரண்டு கொண்டிருக்கின்ற்ன. அப்போது அங்கே ஒரு கட்டிளங் காலை வருகிறான். அவன் அந்தப் பெண் பந்து ஆடும் கோலத்தைக் கண்டு மகிழ்வதற்கு வாய்ப்பு உண்டு. அந்தப் பந்து மேலும் கீழும் எழும்பி விழு வதையும், அவள் தன்னுடைய கையினால் வீசி அடித்தலையும் கண்டு வியக்கலாம். ஆனால் அவன் பந்தையும் காணவில்லை; அதனை ஆடும் திறத்தையும் காணவில்லை. பந்தை ஆடுகின்ற மங்கையைத்தான் கண்டான். விளையாட்டின் திறத்தைக் கண்டு அநுபவிக்கின்ற இயல்பும், மனமும் அவனுக்கு வந்திருக்கலாம். ஆனால் அவன் உள்ளம் மங்கையின் அழகைக் கண்டு சுவைப்ப தில் ஈடுபடுகிறது. 314