பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தாகுலம் தீர முள்ளும் ரோஜாவும் நல்ல பொருள் எங்கேனும் இருந்தால் அதன்பாலுள்ள நன்மையைக் கண்டு நுகர்வது ஒருவகை. அதனிடம் உள்ள தீமையை நுணுக்கமாக ஆராய்ந்து அதைத் தெரிந்து கொள்வது ஒரு வகை. ரோஜாப்பூ ஒரு செடியில் பூத்திருக்கிறது. அந்தச் செடியைப் போய்ப் பார்க்கும்போது மேலேயே மலர்ந்திருக்கும் ரோஜாப் பூவைக் கண்டு இன்புறலாம். அப்படி இல்லாமல் அதில் உள்ள முள்ளைக் கண்டும், அதைத் தொட்டுப் பார்த்தும் துன்பத்தை அடைகிறவர்களும் இருக்கிறார்கள். சின்னஞ்சிறு குழந்தையை ரோஜாப் பூவின் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்தி னால் அது பூவைத்தான் தொட்டுப் பார்க்கும் என்று சொல்வதற் கில்லை. முள்ளைத் தொட்டுக் கையில் ரத்தக் காயம் உண்டாக்கிக் கொள்ளலாம். பார்வையில் வேறுபாடு அந்தக் குழந்தையின் நிலையில்தான் இந்த ஆடவன் இருக் கிறான். பந்தாடும் திறமையையும், அவளுடைய உடம்பு அசை வினில் அவளுக்கு இருக்கும் சுறுசுறுப்பையும் உணர்ந்து வியக்க வேண்டிய அவன் அந்த மங்கையின் அழகைக் கண்டு வருந்து கிறான். அழகைத் தனித்து நின்று பார்ப்பதும் இல்லை. அந்த அழகைத் தான் அநுபவிக்க வேண்டுமென்று பார்க்கிறான். அவ னுடைய கண்ணில் உள்ள கோளாறு அது. மங்கைப் பருவம் வந்த ஒரு பெண்ணை அவனுடைய தந்தையும் பார்க்கிறான்; தமையனும் பார்க்கிறான்; வேறு ஓர் ஆடவனும் பார்க்கிறான். தந்தை அவள் மிக்க அழகி என்று கண்டு அவளுக்கு ஏற்ற கணவனைத் தேடவேண்டுமென்று நினைக்கிறான். தமையனும் அப்படியே நினைக்கிறான். அந்த அழகைத் தனித்து நின்று சுவைக்கிற ஆற்றல் அவர்களுக்கு உண்டு. அப்படியின்றி அயலானாகிய காளையோ அந்த அழகைக் கண்டு அதனைத் தான் நுகர எண்ணுகிறான். இது அவன் உள்ளத் தில் உள்ள உணர்ச்சி காரணமாக நிகழ்வது. இதைத்தான் பெண் மயல் என்று சொல்கிறோம். தந்தை, மகள் என்ற பாவத்திலே பார்க்கிறான். தமையன் சகோதர பாவத்துடன் பார்க்கிறான். 315