பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 அயலானாகிய ஆடவனோ காமத்துடன் பார்க்கிறான். இந்த மூவரும் அழகை நன்கு சுவைப்பவர்களே. ஆனால் முதலில் சொன்ன இருவருடைய உள்ளமும் தூய்மையாக இருப்பதனால் அவர்கள் அழகைக் காண்பதில் தீங்கு ஒன்றும் நேருவது இல்லை. மூன்றாமவன் பார்ப்பதில் அவனுக்கும் தீங்கு உண்டாகிறது; அவன் ஆற்றல் உடையவனாக இருந்தால் அந்தப் பெண்ணுக்கும் தீங்கு உண்டாகும். சுழற்சி பந்தாடும் மங்கையைப் பார்க்கிற ஆடவன் தன்னை அந்த மங்கையோடு தொடர்புபடுத்தி அவள் அழகைத் தான் நுகர வேண்டுமென்று நினைக்கிறான். மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து அவளை அடைவதற்கு என்ன வழி என்று யோசனை பண்ணுகிறான். அவளுடைய கண்ணாகிய கயல் அவனைச் சிறைபடுத்துகிறது. பொதுவாகக் கயல் வலையில் படும் என்று சொல்வார்கள். இங்கே கயலே வலை வீச, அந்த வலைக்குள் இந்த ஆடவனுடைய உள்ளம் பட்டுவிடுகிறது. அதனால் அவன் மனத்திலே உழல்கிறான். பலபல வகையான எண்ணங்கள் எண்ணுகிறான். அவன் மனம் சுழலுகிறது. அதன் பயனாக அவளை அடைவதற்கு என்ன வழி என்று யோசித்துப் பற்பல காரியங்களைச் செய்கிறான். சுழன்று வருகிறான். மனத்திலே சுழற்சியும், உடம்பிலே சுழற்சியும் அவள் பார்வையில் பட்டு உருகுவதனாலே ஏற்படுகின்றன. சிங்தாகுலம் பந்தாடும் மங்கையைப் பார்த்து நிற்பது ஒரு வகை. அவளுடைய கயல் பார்வையைக் காணுவது ஒருவகை. இந்த இரண்டிலும் தவறு இல்லை. ஆனால் அந்தப் பார்வையில் பட்டு உருகுவதே தவறு. உருகுவது உள்ளத்துடன் முதலில் நிற்கும். பின்பு இதுகாரணமாக நெஞ்சிலே உழன்று, உடம்பினாலும் உழலுகின்ற நிலை வந்து விடுகிறது. அப்போது அந்த ஆடவன் மற்றக் காரியங்களை எல்லாம் மறந்து பெண் மயலில் ஆழ்ந்து உலகத்தில் பலவகையான துன்பங்களை அநுபவிக்கிறான். அப்போதும் தான் அடையவேண்டிய ஒரு பொருளை அடைய 316