பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தாகுலம் தீர வில்லையே என்ற கவலையோடு இருக்கிறான். அவன் சிந்தா குலம் உடையவனாக, பித்துப் பிடித்தவனாகத் திரிகிறான். இத்தகைய சிந்தாகுலத்தைத் தீர்ப்பதற்கு வழி என்ன? ஆண்ட வனுடைய திருவருள் இருந்தாலன்றி இந்தக் கலக்கத் தினின்றும் தெளிவு பிறக்காது. ஆதலின் அருணகிரியார் இத்தகைய சிந்தா குலத்தை நீ தீர்த்து அருள வேண்டுமென்று முருகப் பெரு மானிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார். பந்தாடும் மங்கையர் செங்கயல் பார்வையில் பட்டு உழலும் சிந்தாகுலந்தனைத் தீர்த்து அருள்வாய். விளையாட்டும் வினையும் மகளிர் பந்து ஆடும்போது அதை விளையாட்டாகக் கருதி ஆடுகிறார்கள். அதனைப் பார்க்கிறவர்களும் விளையாட்டாகக் கருதிப் பார்க்க வகை உண்டு. ஆனால் உள்ளத்தில் மயல் உணர்ச்சி உள்ளவனோ அதை விளையாட்டாகப் பாராமல் வினை யாட்டாகப் பார்க்கிறான். அந்த விளையாட்டு அவனிடத்தில் தீமையை உண்டாக்குகிறது. 'விளையாட்டே வினையாகும்" என்ற பழமொழி உண்டல்லவா? அது அவன் திறத்தில் பலித்து விடுகிறது. உலகத்தில் நமக்கு உண்டாகின்ற அநுபவங்கள் எல்லாம் முற்பிறவியில் செய்த வினைகளால் நிகழ்வன. அந்த வினைகள் அடியாகத்தான் நமக்கு இன்ப துன்பங்கள் உண்டாகின்றன. இந்த விளையாட்டில் ஈடுபட்டு மனம் உருகிப் பலவகையான அல்லல் களில் துன்புற்று வருகிறோம். ஆனால் இறைவனுடைய திரு வருளை எண்ணி வாழுகின்ற மக்களுக்கு இந்த வினையாட்டும் ஒரு விளையாட்டாகத் தோற்றும். இறைவனுடைய அருள் ஆணை என்னும் கயிற்றில் ஊசலைப் போல நாம் ஆடிக் கொண்டிருக் கிறோம். நாம் நினைக்கிறோம். நாம் துன்புறுகிறோம். நாம் மகிழ்ச்சி அடைகிறோம் என்று நம்மோடு தொடர்புபடுத்திப் பார்த்தால், ஐயோ விதியே! என்று இரங்கத் தோன்றும். 'யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை' என்பார் மணிவாசகர். கூத்தாட்டுவான் இறைவன். அவன் திருவருள் ஆணையால் இந்த ஆட்டங்கள் எல்லாம் நிகழ்கின்றன 317