பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 என்று பிரபஞ்சத்தில் உள்ள எல்லா நிகழ்ச்சிகளையும் மூலப் பொருளாகிய இறைவனது விளையாட்டாகக் காணுகின்றவனுக்கு, விளையாட்டை நினைக்கின்றபோது உண்டாகும் இன்பம் உண் டாகும். ஞானிகள் எல்லாவற்றையும் அப்படிப் பார்க்கிறார்கள் இந்த வகையில் தம்முடைய அநுபவங்களை வேறே நிறுத்திப் . பார்த்தலைச் சாட்சி மாத்திரமாக நின்று பார்ப்பது என்று . சொல்வார்கள். . தாயுமானவர் இந்தத் திருவிளையாடலைப் பற்றிப் பேக கின்றார். அறுவகையான சமயங்களில் உள்ளவர்கள், 'என் கடவுள் பெரியவன், என் கடவுள் பெரியவன்' என்று கூத்தாடுகிறார்கள். இறைவனைப் பற்றிப் பேசும்போதே இந்த வேடிக்கை நிகழ் கிறது என்றால் மற்றத் திறங்களைப் பற்றிச் சொல்ல வேண்டிய தில்லை. எங்கே பார்த்தாலும் கலகந்தான்; போட்டிதான். இவற் றுக்கு எல்லாம் மூலகாரணமாக இருப்பது எது? இறைவனுடைய அருள் ஆணை. அது செய்கிற விளையாட்டுத்தான் இத்தனையும். அவன் எல்லாவற்றுக்கும் பின்னாலே பொம்மலாட்டக்காரன் திரைக்குப் பின்னால் மறைந்து நின்று எல்லாவற்றையும் ஆட்டு வது போல நின்று ஆட்டுகிறான். இடையில் உள்ள திரைதான் மாயை என்பது. மாயை மறைப்பதனால் நாம் எல்லாவற்றையும் வினையாட்டாகக் காண்கிறோம். விளையாடலிலேகூட வினை யாட்டைப் பார்க்கிறோம். இதனைத் தாயுமானவர் சொல்கிறார். “குன்றாத மூவுருவாய் அருவாய் ஞானக் கொழுந்தாகி அறுசமயக் கூத்து மாடி நின்றாயே, மாயையெனுந் திரையை நீக்கி நின்னையார் அறியவல்லார்? நினைப்போர் நெஞ்சம் மன்றாக இன்பக்கூத் தாட வல்ல மணியே.என் கண்ணேமா மருந்தே நால்வர்க் கன்றாலின் கீழிருந்து மோன ஞானம் அமைத்தசின்முத் திரைக்கடலே அமர ரேறே." திருடன் பார்வை ஒரு குழந்தை விளையாடுகின்றது. காலில் தண்டையும், வெண்டையமும் அணிந்திருக்கிறது. கையில் காப்புப் புனைந்து இருக்கிறது- அதன் கழுத்தில் சங்கிலி மின்னுகிறது. தலையில் 3.18